தெஹிவலை மிருககாட்சி சாலைக்கு அடுத்த வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் Dar Ul Quraan விவகாரம் கடந்த நாட்களில் நாம் அறிந்ததே. மேற்படி பௌத்த மதகுருக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பொலிஸாரினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று ஞாயிற்று கிழமை மாலை, எஸ்.டீ.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. மிக நீண்ட நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில் ஜமாஅத் தொளுகையய் நிறுத்துவது என்ற தீர்மானத்தை - கடும் போக்காளர்கள் எடுத்துள்னர்.ஆனாலும் முஸ்லீம்கள் தொளுகைஐ நிறுதவில்லை..
மஸ்ஜித் தொடர்பிலான கலாச்சார அமைச்சின் பதிவுகள் இருந்தும் கூட சட்டவிரோத வணக்கஸ்தலம் என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தெஹிவலை பாத்தியா மாவத்தை மஸ்ஜித், அநுராதபுரம், தம்புள்ள, கண்டி, டெஹிவள (பீரிஸ் ரோட்), குருநாகலை, தெஹிவலை-Next to Zoo என ஆர்ப்பாட்டக்கார பௌத்த மதகுருக்களால் முற்றுகையிடப்படுகின்றன. பலாத்காரமாக மூடவைக்கப்படுகின்றன. இந்த நிலை தொடருமானால் இலங்கையில் மாவட்டத்திற்கு ஒரு சில பள்ளிவாசல்களே எஞ்சியிருக்கும் நிலை உருவாக சாத்தியங்கள் உண்டு.
இந்த நாட்டில் சட்டம், நீதி போன்ற துறைகள் செயற்பட்டாலும் கூட அவற்றையும் தாண்டி சில பலாத்கார சக்திகள் தங்கள் இலக்கை அடையவே செய்கின்றன. ஒரு மஸ்ஜிதை அகற்ற வேண்டுமென்றால் ஹாமத்துருக்களை பஸ்களில் ஏற்றி வந்து குறித்த இடத்தில் இறக்கி, சிங்க கொடியையும், பௌத்த கொடியையும் அசைத்தவாறு கூச்சலிட்டால் போதும். அந்த பள்ளிவாசலை மூடிவிடலாம் எனும் நிலைக்கு இனவாதிகள் சென்றுள்ளனர்.
இன்று முஸ்லிம்களிடம் பணம் இருக்கிறது. கல்வியறிவு இருக்கிறது. ஆனால் இந்த இனவாத சக்திகளிற்கு எதிராக போராடும் தைரியம் இல்லை. இலங்கையின் அரசியல் சட்டங்களிற்கு உட்பட்ட வகையில், இந்த நாட்டின் அரசியல் யாப்பை மீறாத வகையில் நாம் இதற்காக இறுதிவரை போராடல் வேண்டும். இது எமது உரிமையும் கூட.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்கள் எதிர்ப்புணர்வை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வெளிப்படுத்தல் வேண்டும். எமக்கிடையிலான ஜமாத் ரீதியான பிளவுகளை மறந்து எமது மஸ்ஜித்களை காப்பாற்ற வேண்டியது நம் முன் எழுந்து நிற்கும் பிரச்சனையாகும். அனைத்து விதமான இராஜதந்திர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும். முஸ்லிம் சட்டவல்லுனர்கள் இந்த விடயத்தில் அர்ப்பணத்துடன் எந்த வித அரசியல் இலாபங்களிற்கும் அப்பாற்பட்ட நிலையில் செயற்படல் வேண்டும்.
இன்னொரு மியான்மார் (பர்மா) நிலை இலங்கை முஸ்லிம்களிற்கு ஏற்படக்கூடிய அபாயம் நெருங்கி வருவதாகவே உணர முடிகிறது. இதை நாம் கவனமாக கையாள வேண்டும். இறைவன் நம்முடன் துணை நிற்பான். இன்ஷாஅல்லாஹ்.
LM Report on Dar Ul Quraan
தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இன்று மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெறறு உள்ளது..
குறித்த கூட்டம் முஸ்லிம் தரப்புக்கு சாதகமானதும் ,பாதகமானதுமான முறையில் முடிவடைந்துள்ளது.
தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதனால் மதரஸாவாக இயங்க அனுமதி வழங்கப்பட்ட போதும் மஸ்ஜிதாக இயங்க முடியாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு பதிவை உறுதிப் படுத்தும் ஆவணங்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றியும் , இவைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தற்போது முஸ்லிம் தரப்பில் ஆராயப் படுகிறது . இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் பதிவு செய்யப்படும்.
No comments:
Post a Comment