Monday, September 17, 2012

குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சாபத்திற்குரியவர்கள்!!!


தொகுப்பு : மௌலவி பீ.எஸ்.ரஃபீக் அஹ்மத் ரப்பானி
இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர்மீதும் கட்டாயமாதாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை? என்பதை விளக்குகிறது இந்நூல்.
சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்
சபிப்பதைத் தடை செய்யும் நபிமொழிகள்
யாரை சபிக்கலாம்? யரை சபிக்கக் கூடாது?

சாபத்திற்குரியவர்கள்
1) இணைவைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்
2) விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்
3) புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும் அனாச்சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்
4) மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப் படுத்துபவர்கள்
5) மார்க்கக் கடமைகளை தட்டிக் கழிக்க தந்திரங்களைக் கையாள்பவர்கள்
6) பிராணிகளின் அங்கங்களை சிதைப்பவர்கள்
7) ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண்களைப் போல் நடக்கும் ஆண்கள்
8 இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்
9) பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்
10) உலகப் பேராசை
11) நபித்தோழர்களை விமர்சிப்பவர்கள்
12) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்
13) கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி
14) மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாறி வைத்து அழும்பெண்கள்
15) மது அருந்துபவர்களும் அதை ஆதரிப்பவர்களும் அதற்கு துணை நிற்பவர்களும்.
 
சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்
. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள்னைவருடையவும் சாபம் உண்டாகும்.
. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. அல்குர்ஆன் : 2 :159-162
. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
. இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். அல்குர்ஆன் : 5:78,79.
. அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அல்குர்ஆன் : 11:18.
. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ லி அத்தகையோருக்குச் சாபந்தான். அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது. அல்குர்ஆன் : 13:25.
. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி ஐந்தாவது முறை, (இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும் என்றும் (அவன் கூற வேண்டும்).அல்குர்ஆன் : 24:6,7.
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. அல்குர்ஆன் : 24:23.
மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள். இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்குர்ஆன் : 28:41,42.
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். அல்குர்ஆன் : 33:57.
. முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களி­ருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
. அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள். அல்குர்ஆன் : 33:60,61.
. (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதி­ருந்தும்) துண்டித்து விடுவும் முனைவீர்களோ?
. இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான். அல்குர்ஆன் : 47:22,23.

சபிப்பதைத் தடை செய்யும் நபிமொழிகள்
பொதுவாகவே, யாரையும் சபிப்பது கூடாது. அதிலும் குறிப்பாக ஒரு முஸ்­ம் பிறரை வாழ்த்துபவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர சபிப்பவனாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
அல்லாஹ்வின் சாபம் உம்மீது உண்டாகுக! என்றோ அல்லாஹ்வுடைய கோபம் உம்மீது உண்டாகுக! என்றோ, நீர் நரகத்திற்குச் செல்க! என்றோ நீங்கள் ஒருவர் மற்றவரை ஏசாதீர்கள்; என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜூன்துப் (ரலி), நூல் : அபூதாவூத், திர்மிதி : 2070.
அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பவர்களுக்குக் கேடு விளைவிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சி அவர்களைச் சபியுங்கள்! என்று கூறப்பட்டதற்கு நிச்சயமாக நான் அருளாகவே அனுப்பப் பட்டுள்ளேன் : சபிப்பவனாக அனுப்பப் படவில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்­ம் : 2071.
ஏசிக்கொள்ளும் இருவரின் ஏச்சின் பாவம் முத­ல் ஏசத் துவங்கினாரே அவர் மீது ஏற்படும் லி ஆனால் அநியாயத்திற்குள்ளானவர் அளவு மீறாதிருக்கும் வரையில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூற்கள் : முஸ்­ம், அபூதாபூத், திர்மிதி : 2073.
மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் பிராணிகளையும் கூட சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்த போது அன்ஸார்களில் ஒரு பெண் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்த போது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு அதை விட்டு விடுங்கள் அது சாபத்திகுள்ளானதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) நூல் : முஸ்லிம் : 5058.
அப்படியானால் முரண்டு பிடிக்கின்ற மாடு போன்றவைகள் சபிக்கப்பட்டவைகளா? என்றால், அந்த அர்த்தம் இல்லை. மாறாக, அந்த பெண்ணுக்குத்தான் அது தண்டனை அவளுடைய கூட்டத்தாரோடு அவள் தாமதமாகப் போய் சேர்ந்தார்கள் இது அந்த பெண்ணுக்குத்தான் தண்டனை ஏனெனில் பிராணிகளை சபிக்கக் கூடாது என்று ஏற்கனவே தடைசெய்யப்பட்டதைத் தெரிந்திருந்தும் அந்தப் பெண்மணி சபித்தார்கள். விட்டு விடு என்று சொன்னதி­ருந்து அவள் விட்டுவிட வேண்டும். மற்றவர்கள் வந்து அதை ஓட்டிக்கொண்டு சென்று விடலாம் என்று பொருளல்ல. மாறாக, பிறகு வந்து ஓட்டிக் கொள்ள வேண்டும் என்று பொருளாகும்.
யாரை சபிக்கலாம்? யாரை சபிக்கக் கூடாது?
1) ஒரு முஸ்லிமை குறிப்பிட்டு சபிப்பது. இது ஹராமாகும். எந்த ஒரு முஸ்லிமையும் சபிப்பது கூடவே கூடாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 6047.
2) குறிப்பிட்ட குணங்களை அடிப்படையாகக் கொண்டு சபிப்பது. உதாரணமாக : அநியாயக்காரர்கள், பொய்யர்கள், பாவிகள், மார்க்கத்தில் புதிய விஷயங்களைத் தோற்றுவிப்பவர்கள் இவர்களை சபிப்பது
அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி கூடும் என்று ஹைஸமீ (ரஹ்) இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! அல்குர்ஆன் : 2:89.
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்! என நீர் கூறும்.அல்குர்ஆன் : 3:61.
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.அல்குர்ஆன் : 11:18.
எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ லி அத்தகையோருக்குச் சாபந்தான் அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது. அல்குர்ஆன் : 13:25.
3) இறைமறுப்பாளர்களில் குறிப்பிட்டு சபிப்பது. இதைக் குறித்த மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன:
அ) இறைநிராகரிப்பின் மீது அவரது இறுதி முடிவு இருந்தது என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிய வேண்டும். அபூ ஜஹல், அபூ லஹப், ஃபிர்அவ்ன் போன்றவர்களை இந்த அடிப்படையில் சபிப்பது கூடும்.
ஆ) இறைநிராகரிப்பாகவே வாழ்ந்தார். ஆனால், இறப்பு எப்படி இருந்தது? என்று தெரியாது என்றால், அவர் காஃபிராக மரணித்திருந்தால் அவர் மீது சாபம் உண்டாகட்டும்! என்று வரையறுத்துக் கூறவேண்டும். அதாவது அவரது மரணம் இறைமறுப்பிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்­ம்களையும் இழித்தும் பழித்தும் கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கிருஸ்தவனைக் குறித்துக் கூறுகையில், அவன் காஃபிராக மரணித்திருந்தால் அவன் மீது சாபம் உண்டாகட்டும்! என்று கூறியதோடு அவன் இயற்றிய கவிதைகளையும் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தங்களது வரலாற்று நூலான அல்பிதாயா வந்நிஹாயாவில் பதிவு செய்துள்ளார்கள்.
இ) இறைமறுப்பாளர்களில் குறிப்பிட்ட நபரை சபிப்பது. அதாவது அவர் வாழ்கின்ற காலத்திலேயே அவரை சபிப்பது. இது கூடுமா? கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை சமி அல்லாஹு ­மன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹகித் என்று சொன்ன பின்பு, இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) டூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள். அதை சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையி­ருந்து அப்புறப்படுத்துவாயாக என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும் வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள். புகாரி : 804, 1006, 3386, 4560.
இந்த நபிவழியை வைத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமறுப்பாளர்கள் எவரையும் குறிப்பிட்டு சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று ஹதீஸ் சட்டக் கலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
4) தவறு செய்து விட்ட குற்றமிழைத்துவிட்ட முஸ்லிமை சபிக்கலாமா?
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவிக்கிறார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையி­ருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், ‘இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்” என்று கூறினார்கள்.புகாரி : 6780.
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: போதையி­ருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பியபோது ஒருவர் (அவரைப் பார்த்து), ‘அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்” என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்” என்றார்கள். புகாரி : 6781.
ஒரு முஸ்லிம் பாவமே செய்து விட்டாலும் அவனை சபிக்கக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றன. பின் வரும் இந்த ஹதீஸை வைத்து இப்னு ஹஜர் (ரஹ்) போன்ற சிலர், முஸ்­ம்களில் பாவம் செய்து விட்டவர்களை சபிக்க அனுமதி உண்டு என்கின்றனர்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) நூல் :புகாரி : 5194.
எனினும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) போன்றவர்கள் பாவம் செய்து விட்ட முஸ்லிமை சபிப்பதற்கு அனுமதியளிப்பதாக இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. மேலும், தக்கக் காரணமின்றி இறைமறுப்பாளர்களையே சபிக்கக் கூடாது எனும் போது முஸ்லிமை எந்த வகையிலும் சபிப்பதற்கு அனுமதியே இல்லை என்பது தான் சரி”என்று கூறுகிறார்கள்.
1) இணைவைத்தலும் அதைச் சார்ந்த செயல்களும்
‘அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்”என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் :அலீ (ரலி) நூல் : முஸ்லிம் : 4002, 4003.
இந்த ஹதீஸில் நான்கு நபர்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள். 1) அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுத்து பலியிடுபவர். அதாவது சிலை, சிலுவை, சமாதி போன்றவைகளுக்காகவோ அல்லது ஆதம் (அலை) நூஹ் (அலை) இப்ராஹீம் (அலை) மூஸா (அலை) போன்ற இறைத்தூதர்களின் பெயராலோ அல்லது அவர்களது அடக்கத்தலங்களிலோ அறுத்துப் ப­யிடுதல் அல்லது ஸஹாபாக்கள், பெரியார்கள் மகான்களின் அவுலியாக்களின் நினைவாகவோ அவர்களின் அடக்கத்தலத்திற்கோ சென்று அறுத்துப் ப­யிடுதல் இப்படிப்பட்ட அனைத்துமே அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுத்து ப­யிடுதல் என்பதிலேயே சேரும் இவையனைத்தும் இணைவைத்தலாகும் இணைவைத்தல் சாபத்திற்குரிய செயலாகும்.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் லி வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் : 2:173.
2) பெற்றோரை சபிப்பவன். இவனும் அல்லாஹவுடைய சாபத்திற்கு ஆளாகிறான். பெற்றோரை சபிப்பது இன்றைய காலத்தில் வேண்டுமானால் எங்காவது பார்க்கலாம். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இது ஆச்சரியமானதாகத் தெரிந்தது. அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் பெற்றோரை சபிப்பார்களா? என்றெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி : 5973.
3) பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடுபவன். இவனும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாகிறான். ஆடையாளச் சின்னங்கள் என்பது புனித மக்கா மதீனா போன்ற நகரங்களிலுள்ள அடையாளச் சின்னங்கள் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால், உலக நிலப் பரப்புக்களில் உள்ள அனைத்து அடையாளச் சின்னங்களையும் இது குறிக்கும். மற்றவருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொள்ள அவருடைய அடையாளச் சின்னத்தை மாற்றிவிடுவது என்பது இதன் பொருளாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
அறிவிப்பாளர் : ஸயீத் இப்னு ஸைத்(ரலி) நூல் : புகாரி : 2452.
அபூ ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள்: எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகால்த்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும் என்று கூறினார்கள். நூல் : புகாரி : 2453.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நிலத்தி­ருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான்.
அறிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : புகாரி : 2454.
5) மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளிப்பவன். இவனும் இறைவனின் சாபத்திற்குரியவனே.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரி : 2697.
மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை உருவாக்குபவனல்ல. மாறாக, அதற்கு அடைக்கலம் தருபவன் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகிறான் என்றால் அதை உருவாக்குபவனுடைய கதி என்ன என்பதை யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள: (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்பான்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல் : புகாரி : 6582.
இறந்தவருக்கு அவர் நல்லடியார் (?) என்ற நம்பிக்கை அடிப்படையில் சமாதி எழுப்புவது மயிலிறகால் மந்திரிப்பது அந்த அடக்கத்தலத்தில் சென்று மொட்டை போடுவது பத்தி ஏற்றுவது சந்தன கூடு உரூஸ் கொண்டாடுவது நேர்த்திக்கடன் செலுத்துவது இது ஒரு வகை. இன்னொரு வகை, இறந்தவருக்கு 3 ம்நாள் 7ம்நாள் ஃபாத்திஹா வருச ஃபாத்திஹா. நல்லடியார் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவருக்கு அடக்கத்தலம் எழுப்புவது அந்த அடக்கத்தலத்தின் மீது பூக்கள் போடுவது. சந்தனம் தெளிப்பது. அதே போல் பெண் சடங்காகி விட்டால் அதை பகிரங்கப் படுத்துவது அதை நிகழ்ச்சியாகக் கொண்டாடுவது திருமணம் போன்ற நேரங்களில் மணமகனை மலர்களால் அலங்கரிப்பது சேவல், ஆடு போன்றவற்றால் மணமகனை திருஷ்டி கழிப்பது குதிரை சவாரி செய்வது பைத் பாடியவாறு மணமகனை அழைத்து வருவது திருமணத்தில் கருகமணி கட்டுவது கணவன் இறந்ததும் அதை அறுத்தெறிவது ரஜப் மாதத்தில் பூரியான்(னைப்) பாத்தியா (?) ஷஅபான் மாதம் அல்வா பாத்தியா ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு இப்படி இஸ்லாமிய சமுதாயத்தில் ஊடுருவி விட்ட நூதன, குர்ஆன் ஹதீஸில் இல்லாத இஸ்லாம் காட்டித் தராத அனாச்சாரப் பழக்கங்களின் பட்டியல் மிக நீளமானவைகள் இவைகளை செய்து கொண்டிருக்கும் வரை அல்லது அதற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் வரை அல்லது அவை மார்க்கத்திற்கு முரண்பட்டவை என்று உணராத வரை அவைகளைத் தூக்கியெறிய முன் வராத வரை முஸ்லிம்கள் இறைவனின் சாபத்தில் சிக்கியுள்ளார்கள் என்பதை உணரவேண்டும்.
அடைக்கலம் தருவது என்றால் என்ன? மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை செயல் படுத்தப்படும் போது அதைக் கண்டும் காணாமலும் இருப்பது. அதைப் பார்த்துப் பொறுமையுடன் இருப்பது. அது தவறு என்பதை சுட்டிக் காட்டாமல் இருப்பது. அதற்கு நிதிஉதவி மூலம் ஊக்கப்படுத்துவது போன்றவைகள் ஆதரவளிப்பதில் அடங்கும். இன்னும் சிலர் மௌலூது ஓதும் மேற்கண்ட சடங்குகளுக்கு ஊதுகுழலாக இருக்கும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது அவருக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தரும் வீடுகளில் பெண்கொடுப்பது பெண்எடுப்பது போன்றவைகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின்றனர் அவைகளும் சாபத்திற்குரிய செயல்களே (அல்லாஹ் மிக அறிந்தவன்).

No comments:

Post a Comment