சுவிசர்லாந்தின் நிதி மையம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணமாக சுவிஸ் பேங்கிங் (அல்லது) சுவிஸ் பேங்கர்ஸ் என்ற அசோசியேஷன் கருதப்படுகின்றது. சுவிஸ் பேங்கிங் ஆரம்பித்து இந்த மாதத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த நூற்றாண்டை கொண்டாடும் விதமாக சுவிஸ் பேங்கிங் 2003-2005 வரை மத்திய வங்கியை இயக்கி வந்த வரலாற்று அறிஞர் ராபர்ட் யூ வோக்லெர் என்பவர் தலைமையில் சுவிஸ் பேங்கிங்கு நூற்றாண்டு ஆய்வறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது.
இந்த சுவிஸ் பேங்கிங் 1912ல் பேலெஸ் என்னும் நகரத்தில் தொடங்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 12% முக்கிய பங்கினை இந்த வங்கிகள் வைத்துள்ளன. மேலும் இந்த அமைப்பு 1,95,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் பற்றிய தகவலை ரகசியமாகவே வைத்திருப்பதினால் அதிகமாக விமர்சனத்திற்கு காரணமாகின்றது
No comments:
Post a Comment