கடந்த வியாழக்கிழமை. தப்லீக் ஜமாத்தினர் அனைவரும் ஒன்று கூடி பயான் கேட்டு படுத்துறங்கி இபாதத் செய்யும் ஜூமைராத் தினம். இலங்கை குடியவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் சகிதம் வந்த பொலிஸார் கிராண்ட்பாஸில் அமைந்துள்ள அகில இலங்கை தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தினுள் நுழைந்து அங்கு தங்கியிருக்கும் மற்றும் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஜமாத் பணியில் ஈடுபட்டிருக்கும் பிற நாடுகளை சார்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பாக தப்லீக் ஜமாத் தலைமை இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரபல வீ.ஐ.பி.கள் மூலம் அரசுடன் தொடர்பு கொண்டது. அரசுடன் இணக்கப்பாட்டிற்கு வர முற்பட்டது. அது இதுவரை எந்தவொரு பயனையும் அளிக்கவில்லை. தப்லீக் ஜமாத்தின் எரிபோருளே வெளிநாட்டு ஜமாத்கள் தான். இலங்கையில் சாதாரண மக்கள் வியந்து மயங்கி அதன் வசம் ஈர்க்கப்படும் முக்கிய சாதானம் வெளிநாட்டு ஜமாத்கள்.
அரசு சார்பாக இப்போது குடிவரவு திணைக்களம் பேசுகிறது. தாம் தடை செய்யவில்லை எனவும் விசாவை துஷ்பிரயோகம் செய்வதனாலேயே இவர்களை வெளியேற்றவேண்டடிய இக்கட்டான சூழல் அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்க கடுமையான விசா நடைமுறை ஒழுங்குகள் பின்பற்றப்படும் எனவும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Please visit Srilankan Immigration web - To get full information on Visa conditions -
யாத்ரீகர்கள் விசா என்ற பிரத்தியேகமான விசா உண்டு. இந்த விசா மூலமே இலங்கையில் இருந்து மாரக்க கடமையை செய் ஹஜ் செல்கின்றனர். உல்லாச பிரயாணிகள் விசாவில் வந்து மார்க்க உபந்யாசம் செய்ய முடியாது. இது இங்கு மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருந்து வரும் விடயமாகும். ஒரு நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வருவதென்றால் எங்கே பிரச்சாரம், என்ன தலைப்பில் பிரச்சாரம் போன்ற பல தகவல்களையும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு வருகையாளரிற்கும் ஏற்பாட்டாளரிற்கும் உண்டு. இவ்வாறான முன் அனுமதி பெறப்படல் உலக வழமை எனும் பொருள்பட அரசு முகவர்கள் உறுதியாக நிற்கின்றனர்.
160 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளின் பட்டியலை கையில் வைத்து கொண்டு மர்கஸிற்கு வந்துள்னர். பட்டியலை கையளித்துள்ளனர். விசாரித்துள்ளனர். விடைபெற்று சென்றுள்னர். இது சுற்றி வளைப்பல்ல. இது முற்றுகையல்ல. இது தேடுதலுமல்ல. விசாரித்தல் மட்டுமே. சில அறிவுருத்தல்களுடன் கூடிய விசாரித்தல். ஒரு ஆரம்பம். சில வேளைகளில் இனவாதத்தின் ஆரம்பமாக கூட இருக்கலாம்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, குடிவரவு குடியகழ்வு திணைக்களம் போன்றவை இலங்கையின் பாதுகாபமைச்சின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.
இந்தியாவிற்கு பொளத்தகாயாவிற்கு செல்லும் சிங்களவர்களும் உல்லாச பயணிகள் விசாவிலேயே செல்கின்றனர். இலங்கை அரசிற்கு தப்லீக் ஜமாத் யார் என்று தெளிவாகவே தெரியும். தெளிவாகவே முடிவெடுத்திருக்கிறார்கள்.
சிங்கள மதவாதிகள் இஸ்லாத்தை கண்டு பயப்படுகிறார்கள். அதன் உன்னதமா பாங்கினை கண்டு பொறாமை கொள்கிறார்கள். முஸ்லிம்களின் கலாச்சாரம், உடை, வழமைகள் என பல விடயங்களில் அவர்கள் மிரட்சி கொண்டுள்ளார்கள். அதன் அரசியல் வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக கூட இது இருக்க சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. பன்சலை அரசியல் மர்கஸை மடக்கியுள்ளது.
“தீவிரவாதத்தின் பொந்து மதம்” என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை சொன்னது போல் இதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்று சொல்ல முடியாது. இது ஒரு தொடக்கமே. தப்லீக் ஜமாத் தலைவர்களால் பாகிஸ்தானில் இருந்து வரும் தாயிகளை பயங்கரவாதத்துடன் அல்லது தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று ஒரு போதும் கரெக்டர் சேர்ட்டிபிகேட் கொடுக்க முடியாத இக்கட்டாண நிலை.
இந்த வழி முறை தொடர்ந்தால் நாளை உள்நாட்டில் உள்ள ஏழை முஸ்லிம் கிராமங்களிற்கு சென்று பிரச்சாரம் செய்ய டேட்டிங் இல்லாத உலமாக்கள் லண்டன் என்றும் சிட்னியென்றும் பாரிஸென்றும் பறந்து மிதந்து குலோபல் பயான் செய்யும் ட்ரென்ட் கேள்விக்குறியே!. நாளை இவர்களும் விசாரிக்கப்படலாம். ஏன் சென்றாய்? எதற்காக சென்றாய்? என்று. இந்த கேள்விகளிற்கு அவர்கள் சொல்லும் விடை உள்நாட்டில் செய்யும் தஃவாவிற்கும் பொருத்தமானதே.
No comments:
Post a Comment