Tuesday, January 24, 2012

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் அடிப்படை சான்றிதழ் கற்கை


க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அத்திவாரமாக தகவல் தொழில்நுட்ப துறையில் அடிப்படை சான்றிதழ் கற்கையை அறிமுகம் செய்துள்ளது. 
இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் அடிப்படை சான்றிதழ் கற்கை 
இந்த கற்கை நெறியை முன்னெடுப்பதற்காக அவுஸ்திரேலியா – கர்டன் பல்கலைக்கழகம், பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தென்கிழக்கு மிசூரி தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் கைகோர்த்துள்ளது. 

தகவல் தொழில்நுட்ப துறையில் கற்கைகளை வழங்குவதிலும், பட்டங்களை வழங்குவதிலும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் முன்னணியில் திகழ்கிறது. அத்துடன், இலங்கை பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தையும் இக்கல்வியகம் பெற்றுள்ளது. 

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் எழுந்துள்ள தேவையில் பெருமளவு பங்கை நிவர்த்தி செய்யும் வகையில், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்ப்படுத்துவதில் இக்கல்வியகம் ஈடுபட்டுள்ளது. கல்வியகத்தில் காணப்படும் நவீன வசதிகளின் மூலம் மாணவர்கள் பெருமளவு அனுகூலங்கை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு நுழைவு தகைமையாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் கணிதம், ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் போதுமானது. அல்லது லண்டன் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். மேலும் தெரிவு பரீட்சையிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

இந்த கற்கைநெறி குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், “எமது கல்வியகம் புதிய கற்கைகளை அறிமுகப்படுத்தும் முன்னர் சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் பல்கலைகலைக்கழகங்களின் ஆலோசனைகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்கிறது. இந்த கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்கள் இரண்டு வருட டிப்ளோமா கற்கைநெறியை தொடர தெரிவாவார்கள்” என்றார்.
 

No comments:

Post a Comment