Monday, January 23, 2012

தவ்பா


அல்லாஹ் குர்ஆனில்:- இறை விசுவாசிகளே !அனைத்துப் பாவங்களுக்கும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்பு தேடுங்கள்.இதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(24:31)
இறை விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்விடமே கலப்பற்ற முறையில் தவ்பா செய்து பாவமன்னிப்பு தேடுங்கள்.(66:8)
அபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-அல்லாஹ்வின் மீது ஆணையாக!நான் ஓறு நாளில் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோருகிறேன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் புகாரி:-6307)
அல் அஹர்று இப்னு யஸார்(ரலி)அறிவிக்கின்றார்கள்:-மனிதர்களே!அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள்.அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள்.நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறு முறை பாவமன்னிப்பு(தவ்பா)தேடுகிறேன் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.(ஆதாரம்:முஸ்லிம் 2702)

No comments:

Post a Comment