வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் க.பொ.த (சா.த) மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இரசாயண சமன்பாடு ஒன்றை பிழையான முறையில் செய்து வைத்திருந்த மாணவியைப் பார்த்து வை..திஸ்.. கொலை வெறி.. கொலை வெறிடி... என நக்கலாகப் பாட்டுப் பாடியதாகவும் இதனால் வகுப்பே சிரிப்பில் அதிர்ததாகவும் தெரியவருகின்றது.
ஆசிரியர் அப் பாட்டை நிறுத்தாது தொடர்ந்து பாடிக் கொண்டு இருந்த போது ஒரு மாணவன் அவரது செயலை தனது தொலைபேசியில் வீடியோவாகப் பதிந்துள்ளான். இதனை அவதானித்த அவ் ஆசிரியர் உடனடியாக அந்த தொலைபேசியை வாங்கிப் பார்த்து விட்டு அம் மாணவனை கன்னம் கன்னமாக கைகளினால் அறைந்து விட்டு பின்னர் பிரம்பு கொண்டு நையப்புடைத்துள்ளார்.
நாங்கள் சும்மா பகிடிக்கு பாட்டுப் பாடுறதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் இணையத்தளத்தில் போட்டுவிடுவீங்கள் பிறகு நாங்கள் பரிசுகெட்டுத் திரிய வேணும் என ஏசியுள்ளார். இதன் பின்னர் ஆசிரியர் அந்த கல்வி நிலையத்தை நடாத்தும் பாடசாலை ஆசிரியரான இயக்குனருக்கு அறிவித்த போது இயக்குனரும் அம் மாணவனை தாக்கியுள்ளார். இதனை அறிந்த மாணவனின் தந்தை, தாய், மற்றும் மாமன் ஆகியோர் கல்வி நிலையத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது நிலமை முற்றி விட்டதை அறிந்த கல்வி நிலைய இயக்குனர் கதையை வேறு பக்கமாக மாற்றி உங்கள் மகன் தொலைபேசியில் ஆபாசக் காட்சிகள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதை நம்பாத தாயார் மாணவனின் வகுப்பினுள் புகுந்து மாணவர்களை விசாரித்த போது மாணவர்களால் உண்மை நிலை தெரியப்படுத்தப்ட்டுள்ளது.
No comments:
Post a Comment