இந்த இஸ்லாமிய அமைப்பினரின் வெளிநாட்டு பயணங்களுக்கான நிதியுதவிகளை அல்-குவைதா அமைப்பு வழங்கி, அவர்களுக்கான விசா அனுமதியை பெற்று கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின என்ற சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளது .
அத்துடன் 2006 ஆம் ஆண்டு மும்பாயில் 166 பேர் உயிரிழக்க காரணமாக தாக்குதலுடன் இந்த ஜமாத் இயக்கத்தினருக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் கிழக்கில் பிரசாரங்களை செய்து வந்துள்ளனர் என்றும்
அதேவேளை இந்த அமைப்பினருடன் சில மாலைத்தீவு பிரஜைகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாலைத்தீவு இஸ்லாமிய நிதியத்தின் தலைவர் இப்ராஹிம் பௌசி தெரிவித்துள்ளார் என்றும் .
இதனிடையே இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இலங்கை யார் வரவழைத்தது என்பது குறித்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
மிகவும் அமைதிபூர்வமான சர்வதேச அமைப்பான தப்லீக் ஜமாஆத்தை அல்-காய்தா வுடன் தொடர்பு படுத்தும் செய்தியை பெரிய ஜோக் என்று சொன்னாலும் அந்த தகவலின் பின்னால் நாசவேலைகள் மறைந்திருக்கலாம்.