Saturday, February 25, 2012

2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து! 7 பேர் பலி!.



அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள யுமா என்ற இடத்தில் கடற்படையில் பணியாற்றும் விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் கோப்ரா வகை ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி விழுந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

வானிலை மோசமாக இருந்த காரணத்தால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் இதே போன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment