Friday, February 03, 2012

யாழ்ப்பாண முஸ்லிம்களே ஜாக்கிரதை!! பணக்கார பக்கிரிசாக்கள் உங்களை நெருங்குகிறார்கள்!



சமூக மாபெரும் ஒன்று கூடல் எனக் கூறி மீலாது விழாவை நடத்தும் எமது சமூக தலைவர்களிற்கும்,  அரசியல்வாதிகளி ற்கும், சமூக ஆர்வலர்களிற்கும், மார்கத்தை விளங்கியோ அல்லது விளங்காமலோ தங்களை மார்க்க அறிஞர்கள் என்று கூறி கொள்பவர்களிற்கும் நாம் இதன் பின் எதையும் சொல்லப்போவதில்லை.

யாழ் முஸ்லிம் தனவந்தர்களே!, புலம்பெயர் தேசத்து உறவுகளே!, பழைய யாழ்ப்பாண கனவுகளின் சிலிர்ப்பில் உங்கள் பணத்தை இதற்கு வழங்காதீர்கள். பணம் என்பது உங்களிற்கு இறைவனால் அருளப்பட்டது. அதை உபயோகிக்க மட்டுமே உங்களிற்கு உரிமையுண்டு. கண்மூடித்தனமாக அள்ளி இரைக்கவல்ல. நாளை மறுமையில் நாம் சிந்தும் ஒரு துளி தண்ணீரிற்கும் அல்லாஹ்விடம் நாம் கணக்கு காட்டியேயாக வேண்டும். சற்று சிந்தியுங்கள். உங்கள் ஈகோ. உங்கள் பிரஸ்டீஜ், உங்கள் ஸ்டேடஸ், உங்கள் சோசியல் லெவல் போன்ற எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து கபன் தரித்தவர்களாக சிந்தியுங்கள். “நிச்சயமாக மறுமை நம்மை வந்தடையவே போகிறது”

மக்களே...! நாம் உங்களுடன் பேசுகின்றோம். இந்த மீலாது விழா நடாத்தும் கும்பல் நாளை கீழ்வரும் பட்டியலின் பெயர்களிலும் விழா நடாத்தலாம். அதனை “மாபெரும் யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்” என்ற பனர்களின் கீழ் உங்களிடம் கொண்டு வருவார்கள். 

வெள்ளக்கடற்கரை அவ்லியா
பள்ளிக்குடா அவ்லியா
நெய்னா தீவு அவ்லியாபீடி மஸ்தான்
கட்டி மஸ்தான்
சட்டி மஸ்தான்
சங்கிலி மஸ்தான்
மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா)
குரங்கு மஸ்தான்
அனுமான் அவ்லியா 
அணிப்பிள்ளை அவ்லியா 
பாஸ்போர்ட் அவ்லியா 
கப்ரடி அவ்லியா
காட்டு பாவா அவ்லியா
வேப்ப மரத்து அவ்லியா 
மாமரத்து அவ்லியா 
மரத்தடி அவ்லியா
மரக்கட்டை அவ்லியா
மோத்தி பாவா
மிஸ்கீன் அவ்லியா 
பச்சை அவ்லியா 
பக்கீர் மஸ்தான். 
பிச்சை அவ்லியா
அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். 
மலுக்கர்; மஸ்தான்
மைதீன் பிச்சை அவ்லியா
ஆத்தங்கரை அவ்லியா
அக்கரைப்பள்ளி அவ்லியா 
அம்பலத்து அவ்லியா
மக்கட்டி லெப்பை அவ்லியா 
காத்தாடி அவ்லியா 
பல்லாக்கு அவ்லியா 
ஸந்தூக் அவ்லியா 
கால்துட்டு அவ்லியா
சாலை சாஹிப் அவ்லியா
நிர்வாண அவ்லியா
ஹயாத் அவ்லியா
ஹயாத்தே அவலியா 
பிரேக் ஷா அவ்லியா 
ஹாஸ் பாவா அவ்லியா
கேத்தல் பாவா அவ்லியா
பட்டாணி சாஹிப் அவ்லியா
கோட்டு மூஸா அவ்லியா 
மொட்டைப பக்கீர் அவ்லியா
கோதரிசா அவ்லியா 
அப்பா ராவுத்தர் அவ்லியா
படேஷா ஹஸ்ரத் அவ்லியா
வண்ணம் தீட்டும் அவ்லியா
கோயுன் பாபா அவ்லியா
தக்கடி அப்பா அவ்லியா (பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
ஜஹான்ஷா அவ்லியா 
ஒட்டகாஸ் அவ்லியா
காட்டப்பா அவ்லியா 
புளியடி அவ்லியா
காட்டானை அவ்லியா 
கப்படா சாஹிப் அவ்லியா

No comments:

Post a Comment