Saturday, February 11, 2012

விமானியாகப் பணியாற்ற..போர்முனையில் இளவரசர் ஹரி!...




பிரிட்டிஸ் இளவரசர் ஹரி நேற்று ஆப்கானிஸ்தானின் முன்னரங்கப் போர்முனையில் விமானியாகப் பணியாற்ற வந்துள்ள நிலையில், நேட்டோ படையினர் நடத்திய வான் தாக்குதலில் எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் ஹமீத் ஹர்சாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குத‌லை ஒடுக்க அமெரிக்காவின் நேட்டோ படைகள் முகாமிட்டு,அவ்வப்போது பாக்.எல்லையில் வான் தாக்குதலையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் கபீஸா மாகாணத்தின் நெஜ்ராப் மாவட்டத்தில் கியாவாலா கிராமப் பகுதியில் நேட்டோப் படையினர் திடீர் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எட்டு குழந்தைகள் பலியானதாகவும், கபீஸா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் , அதிபர் ஹமீத் கர்சாயிடம் தெரிவித்தார்.

இது போன்ற தாக்குதல்கள் பல முறை நடந்துள்ளது வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது என கர்சாய் தெரிவித்தார். மேலும் இதுவரை நேட்டோ படையினர் நடத்திய வான்தாக்குதல் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அனுப்பி நேட்டோவிடம் விளக்கம்‌ கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டிஸ் இளவரசர் ஹரி நேற்றைய தினம் பயிற்சிக்காக ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். இவர் அபாச்சே ஹெலிகொப்டரின் துணை விமானியாக பணியாற்றி பயிற்சி பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment