ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது.
இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது.

2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் இராணுவ கொள்கை காரணமாக நீர்மூழ்கிக்கப்பல் விற்பனை பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. பலஸ்தீனத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு ஜெரூசலத்தில் யூதர் குடியிருப்புக்களை இஸ்ரேல் அமைத்து வருகின்றது.