Friday, February 10, 2012

மாலத்தீவில் கலவரம் - முன்னாள் ஜனாதிபதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி?



மாலைத்தீவில் பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி நஷீட்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.மாலைத்தீவில் தீடிரென பதவியிலிருந்து விலகினார் நஷீட் அவரைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம்
செய்துகொண்டார்.

இந்நிலையில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் தன்னை வற்புறுத்தி பதவியை ராஜினாம செய்வித்ததாகவும் கூறி நஷீட் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்நாட்டு பொலிஸாருடன் ஏற்பட்ட கலவரத்தில் நஷீட் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக zeenews செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னை வற்புறுத்தி பதவியிலிருந்து இறக்கியதாக கூறுகின்றார் நஷீட்

No comments:

Post a Comment