Friday, March 16, 2012

பலஸ்தீனத்தில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் 40 இலட்சம் பேர் அகதிகளாகவும் உள்ள நிலையில்… இலங்கை தொடர்பில் எந்த முடிவு வந்தாலும் எதிர்கொள்ள தயார்… ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷா


YarlMuslim-athirady

 ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக எத்தகைய முடிவு எட்டப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

தருஸ்மன் அறிக்கையை தவிர்த்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஏற்றது இலங்கைக்கு
பெரு வெற்றி
தருஸ்மன் அறிக்கையை புறந்தள்ளி நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சகல தரப்பினரும் ஏற்றிருப்பது இலங்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி என்று கூறிய அவர், அதிலுள்ள சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர் பாக உத்தரவு பிரப்பிக்க தயாராவதாலேயே அமெரிக்கா பிரேரணையை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக் கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தருஸ்மன் அறிக்கை பற்றியோ போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களை அமுல்படுத்துமாறும் அது தொடர் பாக கண்காணிக்க குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. அனைத்து இனங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாகவே முன்னெடுக்கப்படவேண்டும். எமது உள்ளக விவகாரம் தொடர்பில் பிரேரணை கொண்டு வருவதை ஏற்க முடியாது.
எமக்கு உத்தரவு பிரப்பிக்க மேற்குலகு தயாராவதாலே நாம் இதனை எதிர்க்கிறோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது குறித்து கண்காணிப்புக் குழு நியமிப்பது குறித்து நாமே தீர்மானிக்க வேண்டும். வேறு நாடு எப்படி இதனை கூற முடியும்.
நாட்டு மக்கள் எங்களுடனே உள்ளனர். வேறு நாடொன்று தலையீடு செய்யுமளவு இங்கு அராஜகம் எதுவும் இடம்பெறவில்லை. இலங்கைத் தூதுக்குழு மீண்டும் ஜெனீவா சென்று ஏனைய நாடுகளை அறிவூட்டி வருகிறது. தூதரகங்கள் இல்லாத ஆபிரிக்க நாடுகளை அறிவூட்டவும் விசேட குழுவொன்றை அனுப்பியுள்ளோம். முஸ்லிம் நாடுகளை அறிவூட்டவும் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சில அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஜெனீவா சென்று இலங்கைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றன. யுத்த காலத்திலும் இவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.
இது தவிர ஐ.நா. வில் இருந்து உத்தியோகபற்றற்ற முறையில் நால்வர் இலங்கை வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பிரதான எதிர்க் கட்சி எம்.பிக்கள் இருவர் அடங்களான எதிர்க்கட்சியினர் இலங்கை தொடர்பான தவறான செய்திகளை வழங்குவதாக அறிகிறோம். இது குறித்து நாம் எமது கவலையை தெரிவிக்கிறோம்.
ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து செனல்-4 அலை வரிசை மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முதலாவது வீடியோவை சுயாதீனமான குழுவினூடாக பொய் என்று நிரூபித்தோம். இந்த வீடியோவும் கம்பியூட்டர் தொழில்நுட்பத்தினூடாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நிராகரிக்கிறோம். புலிகளுக்கு உதவும் குழுக்களே இதன் பின்னணியில் உள்ளன.
பலஸ்தீனத்தில் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் 40 இலட்சம் பேர் அகதிகளாகவும் உள்ளனர். எந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாத அளவில் இலங்கையில் சிறப்பாக மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் பேரே மீள்குடியேற்றப்படவேண்டி உள்ளனர். ஆனால் இலங்கை குறித்தே இந்த நாடுகள் பேசுகின்றன.

No comments:

Post a Comment