Sunday, March 04, 2012

யாழ்ப்பாண முஸ்லிம் தலைமைகளின் சிந்தனைக்கு!!



சோனக தெரு. பழைய சோனக தெரு. 1990 களிற்கு முந்திய சோனக தெரு. தமிழ் கலாச்சாரங்களுடன் ஒன்றிப்போன சோனகதெரு. இஸ்லாத்தில் இருந்து விலகி நின்ற சோனக தெரு. தனது பள்ளிவாசல்களிற்கு கூட பிற மாவட்ட மௌலவிகளை கொண்டு வந்து உட்கார வைத்து அழகு பார்த்த சோனக தெரு. தனக்குள்ளே அடித்துக்கொண்ட சோனக தெரு. இப்படி நம் சோனக தெருவிற்கு பல முகவரிகள் உண்டு.

இஸ்லாம் என்றால் என்ன என்றே தெரியாத இஸ்லாமியர்களாக நாம் வாழ்ந்துள்ளோம். சத்திய இஸ்லாத்தில் இல்லாத விடயங்களையெல்லாம்           “முஸ்லிம் கலாச்சாரம்” என்ற பெயரில் உள்வாங்கியவர்களாக வாழ்ந்துள்ளோம். கப்று வணக்கம், தனிமனித வணக்கம் போன்ற ஷிர்க்கான பல விடயங்களில் தோய்ந்து போய் வாழ்ந்துள்ளோம். கத்தம் ஓதி போட்டி சோறு கொடுத்து, சோறு கொடுக்க முடியாதவர்கள் அதை வாங்கி தின்று, வெள்ளக்கடற்கரை கொடியேற்றத்திற்கு குடும்பம் குடும்பமாய் போய் நின்று நாம் நம்மை அறியாமலே பல பித்அத்களை செய்துள்ளோம். அநாச்சாரம் நிறைந்த காலங்கள் அவை.

தப்லீக் ஜமாத்தினை தவிர இரண்டாவது சக்தியாக உருவெடுத்த ஜமா அதே இஸ்லாமி எனும் அமைப்பு அதை வழிநடாத்திய, தன்னை மௌலவி என கூறிக்கொண்ட ஒரு தனி நபரின் தவறான வழிகாட்டல்களால் உள்வாங்கப்பட்டு யாழ் சோனக தெருவில் பல முரண்பாடுகளை உருவாக்க காரணமாயிற்று. மார்க்த்தில் எந்தவித ஆழமான அறிவும் அற்ற இந்த தனிநபரால், அவர் எடுத்த முடிவுகளால் எம்மிடையே ஏற்பட்ட பிரச்சனைகள், சேதங்கள் ஏராளம்.

22 வருடகால புலம்பெயர் வாழ்க்கையில் நாம் பலவற்றை கற்றுள்ளோம். இஸ்லாம் தொடர்பான ஆழமான அறிவு எம்மிடம் ஏற்பட்டுள்ளது. எம் சமூகத்தில் இன்று மதீனாவில் ஒதிவிட்டு வந்த இரு மதனிகள் உருவாகியுள்ளார்கள். இன்னும் பல அரபி மதரஸாக்களில் ஒதிய அலிம் உள்ளனர். விஞ்ஞான தொழில்நுட்ப வளற்சியின் விளைவால் எந்த ஒரு பிரச்சனைக்கம் உலகில் உள்ள சிறந்த இமாம்களிடம் பத்வா கேட்கும் அளவிற்கு நாம் வளற்ச்சி அடைந்துள்ளோம்.

இப்போது யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தப்லீக் ஜமாத் செல்வாக்கு செலுத்துகிறது. அதே வேளை ஏனைய ஜமாத்கள் மஸ்ஜிதை அடிப்படையாக கொண்டு இயங்காமல் இருக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இது தவறான அனுகுமுறை. இஸ்லாமிய பிரச்சாரத்தை எந்த ஒரு தனி இயக்கமும் உரிமை கோர முடியாது. அந்த அடிப்படையில் ஜமாதே தப்லீக் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அனைத்து தரப்பினரும் பிரச்சாரம் செய்யும் தளமாக மஸ்ஜித்கள் மாற்றப்படல் வேண்டும்.

யாழ் சின்னபள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாத்தினரின் ஆதிக்கம் அதிகரிப்பதனை சகிக்க முடியாத சில சக்திகள் அவர்களை அகற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் குறிப்பாக சகோதரர் ஜான்ஸின் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார். இவரது இந்த குறுகிய மனப்பான்மையும், குறை அறிவும் பல பிரச்சனைகளை உருவாக்கவல்லதாய் மாறியுள்ளன. இதனால் மௌலவி என தன்னை பிரகடனப்படுத்திய சுபியான் செய்த தவறை இவரும் செய்ய கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பில் வாழ்ந்து கொண்டு யாழ் சோனக தெருவை குழப்பியடிக்கும் இவரது செயற்பாடுகள் நிறுத்தப்படல் வேண்டும். இவருடன் நெருக்கமுள்ள சகோதரர்கள் இவரிற்கு புத்தி சொல்லி இவரை சீர்திருத்த வேண்டும்.

நேற்றைய “யாழ் முஸ்லிம்” இணையத்தில் சகோதரர் எம்.எஸ்.ஜினுஸ் பேட்டியளித்திருந்ததை நாம் காண்கிறோம். ஞாயிறு மஹ்ரிப் தொழுகையின் பின் மரணித்த கபுராளிகளின் பேரில் திக்ர், குரான் பாரயனம் போன்றவை செய்வது வழமை என்று தனது தந்தையர் காலத்து மூட நம்பிக்கையையும், ஷிர்க்கான விடய்தையும் ஒரு அமலாக காட்ட முற்பட்டுள்ளார்.

பள்ளிவாயல் பூரணமாக இயங்கும் போது இவரது கருத்துக்கள் மெல்ல அமலாக இடம்பிடிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். இஸ்லாம் தொடர்பான தெளிவான விளக்கமோ அல்லது அறிவோ இல்லாத இவர் போன்றவர்கள் பள்ளிவாயல் நிர்வாகிகளாகவும் தலைவர்களாகவும் இருப்பது இஸ்லாத்தை மிக மோசமாக பாதிக்கும். யாப்பு என்ற பெயரில் நினைத்ததையெல்லாம் நிறைவேற்ற மஸ்ஜித் ஒன்றும் பாராளுமன்றம் கிடையாது. மாநகரசபையும் கிடையாது.

மீலாத் விழா என்ற பெயரில் இஸ்லாத்திற்கு முரணாண ஜாஹிலிய கலாச்சாரங்களை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் கப்ராளிகளிற்காக பிரார்த்தனை என்கிறார்கள். இவர்களை போன்றே நம் சமூகத்தில் பாவாக்களை தரிசனம் செய்யும் ஒரு கும்பல் இருக்கிறது. அவரது கையை முத்தமிடுவது. காலை கழுவி குடிப்பது. அவரின் முன் முட்டுக்காலில் மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கி தலை வணங்குவது, என பல கொடிய ஷிர்க்குகளை செய்து வருகிறார்கள்.

இதில் “தங்கள் பாவா” முக்கியமானவர். இப்போது இந்த இணை வைப்பாளர்களின் வாரிசாகிய நளீர் ராஸிக் என்பவர் இதனை யாழ் முஸ்லிம் சமூகத்தில் அறிமுகப்படுத்தும் நபராக மாறியுள்ளார். இவர் யாழ் முஸ்லிம்களின் சேவகர் சட்டத்தரணி ரமீஸின் மைத்துனர். பிரச்சனைக்குரிய நபரான ஜான்ஸினிற்கும் உறவினர். இந்த நளீர் ராஸிக் என்பவரை திருத்துவது சட்டத்தரணி ரமீஸிற்கும், ஜான்ஸினிற்கும் உள்ள முக்கிய கடப்பாடாகும். நாம் இந்த விடயத்தில் இவர்களை சற்று அக்கறை காட்டும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.

தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளிற்காக யாழ் ஒஸ்மானியா கல்லூரி பலியாக்கப்பட்டதுடன் இவர்கள் நிறுத்திக்கொள்வது நல்லது. இறைவனின் மார்க்கத்திலும் தங்கள் ஆதிக்கங்களை செலுத்து முற்பட்டால் தண்டணை அளிப்பது நாங்கள் அல்ல. மாறாக இறைவனாகும். இஸ்லாமிய வரலாற்றில் அழிந்து போன மக்களையும், தனி நபர்களையும் நாம் வழி நெடுகிலும் காண்கிறோம். அந்த வரிசையில் இவ்வாறான எமது சகோதரர்களும் சேர்ந்து விடலாகாது என்பது எமது கவலையாகும்.


இன்று யாழ் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பல தேவைகள் உள்ளன. அவற்றில் கரிசணை காட்டுவோம். இஸ்லாம் எல்லோரிற்கும் உரிமையான மார்க்கம் என்பதை ஏற்றுக்கொள்ள இனியாவது பழகுவோம்.  எமது பண பலம்,  கல்வி அறிவு, சிந்தனைகள் போன்றவற்றின் துணையுடன் நாம் எமது யாழ்ப்பாணம் வாழ் சமூகத்தை குழப்பியடிக்காமல் இருப்பது நாம் அவர்களிற்கு செய்யும் கடமையாகும்.


யாழ் முஸ்லிம் சமுதாய நலன் கருதி சில வேண்டுகோள்கள்


  • சகோதரர் ஜான்ஸின் அவர்களே, உங்கள் தவறான செயற்பாடுகளை, சிந்தனைகளை, எழுத்துக்களை சற்று மீள்பார்வை செய்யுங்கள். குறைந்த பட்சம் குழப்பவாதியாக இருப்பதில் இருந்தும் ஒதுங்கி கொள்ளுங்கள். பித்னா என்பது கொலையிலும் கொடியது. உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதரர் ஜினுஸ் அவர்களே, மார்கத்தில் ஷிர்க்கையும், பித்ஆவையும் அறிமுகப்படுத்தாதீர்கள். தெரியாவிட்டால் மார்க்கத்தை கற்றவர்களிடம் கேட்டு விளங்கி பாவமன்னிப்பு பெற்று கொள்ளுங்கள்.  உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதர் ரமீஸ் அவர்களே, நீங்கள் உங்கள் அரசியலை கல்வியிலும், சமூகத்திலும் திணிக்காதீர்கள். அங்கு வாழ்பவர்கள் அதை பார்த்துக் கொள்வாவர்கள். நீங்கள் மதில் மேல் பூணையாக செய்யும் காரியங்கள் அனைத்தையும் சமூகம் அவதானித்து கொண்டு தான் இருக்கிறது.  ஒரு நல்ல மனிதனின் கெட்ட செயல்களாகவே உங்கள் செயற்பாடுக்ள சமூகத்தில் பதிவாகியுள்ளது. உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகேதரர் நியாஸ் அவர்களே, நீங்கள் சமூகத்தில் இரண்டற கலந்து சமூகத்தை வழிநடாத்துங்கள். உங்கள் திரை மறைவு நாடகங்களையும், காய் நகர்தல்களையும் நாம் அறிவோம். சமூகத்தை பகடைகாயாக்கி விளையாடாதீர்கள். உங்கள் பாதையை சரிபடுத்து கொள்ளுங்கள்.  மூளை என்பது எல்லோரிற்கும் உள்ளது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதரர் சுப்யான் அவர்களே, உங்கள் தவறான வழிகாட்டல்களால் சமூகம் அடைந்த அறுவடைகள் போதும். மீண்டும் ஒரு தமிழ் கட்சிக்காக புரோகிதம் பண்ணாதீர்கள். உங்கள் குருட்டு அரசியலால் நாம் சீரழிக்க்ப்பட்டுள்ளோம். உங்கள் பாதையை மாற்றிக் கொள்ளுங்கள்.  இல்லாவிடின் ஒதுங்கி வழிவிடுங்கள். உங்கள் தியாகமும் சேவையும் மதிக்கத்தக்கது. அதனை மிதிக்கத்தக்கதாக மாற்றுவதும் மாற்றாததும் உங்கள் கரங்களிலேயே உள்ளது. உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதரர் நளீர் ராஸிக் அவர்களே, ஷிர்க்வாதியாக உலா வருவதை விட்டு விடுங்கள். உங்கள் எதிர்கால நோக்கங்கள் பற்றி நாம் அறிவோம். உங்களை அல்லாஹ் நாடினால் மட்டுமே மன்னிக்க முடியும். உங்கள் இணைவைப்புக்களை பின்பற்றி வேறெவரும் இணைவைக்க முற்பட்டால் அந்த பாவத்தின் காரணமாக நரகத்தின் படுகுழியில் நீங்கள் சென்றடைய நேரிடும்.  உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம். ஆனால் இறைவன் கையிலேயே முடிவுள்ளது.

  • சகோதரர் அஸ்மின் அய்யூப் அவர்களே, நீங்கள் எதற்காக யாழ்ப்பாணம் வந்தீர்கள் என்பதையும் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்கிறீர்கள் எனவும் நாம் அறிவோம். உங்கள் தனிபட்ட வளற்சிக்காக இஸ்லாத்தை தாரைவார்க்க விளையாதீர்கள். நீங்கள் தரமிக்க ஆளுமையுள்ள மனிதர் என்பதும் எங்களிற்கு தெரியும். அற்ப வாழ்க்கைக்காக உங்களையே நீங்கள் மெல்ல மெல்ல இழந்து வருகிறீர்கள். நிறுத்தி கொள்ளுங்கள். தவறான எல்லாவற்றையும்.  உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதரர் முபீன் அவர்களே, நீங்கள் ஒதுங்கி வழிவிடுங்கள். இளைவர்கள் காத்திருக்கிறார்கள். உங்களை பற்றிய பல முறைப்பாடுகள் நாலா பக்கமும் வந்தவண்ணமுள்ளன. உங்கள் கரங்கள் கறைபடியாததா அல்லது கேவலமானதா என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் தவறுகளை திருத்தி மறுமை வாழ்விற்கான மனிதனாக மாறுங்கள்.  இது உங்களிற்கு நல்லது. போதும் உங்களால் சமூகம் அடைந்ததும் இழந்ததும். உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம். 

  • முஸ்லிம் வியாபாரிகளே, உங்கள் கோமாளித்தனமான உல்லாசங்களை செய்யும் இடமாக யாழ்ப்பாண சோனக தெருவை மாற்றி விடாதீர்கள். அது போன்றே உங்கள் நிதியுதவியை குர்ஆன் சுன்னாவிற்கு பொருத்தமான விடயங்களிற்கு மட்டும் வழங்குங்கள்.  உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

  • சகோதரர் அன்ஸிர் அவர்களே, நீங்கள் எம் சமூகத்தின் தரமான ஊடகவியளாலர். நேர்மையானரும் கூட. உங்களின் உள்ளத்தின் உண்மை தன்மையை நாம் அறிவோம். யாழ் முஸ்லிம்களின் வளற்சிக்காக உடலாலும் உள்ளத்தாலும் பாடுபடும் ஒரு நல்ல சகோதரர் நீங்க்ள். கருத்துக்களம் என்ற பாணியில் குர்ஆன் சுன்னாவிற்கு நேரடியாக சவால்விடும் எம்.எஸ். ஜினுஸ் போன்றவர்களின் ஷிர்க்கான கருத்துக்களை பிரசுரிக்காதீர்கள். உள்ளதை உள்ளபடி வெளியிடும் உங்கள் ஊடக தர்மத்தை புரிந்த நிலையிலேயே இதை சொல்கிறோம். ஊடக தர்மங்கள் நாளை மறுமையில் சாட்சி சொல்லாது.  உங்களிற்காக நாம் பிரார்த்திக்க தயாராக உள்ளோம்.

ஆழமான பிரார்தனைகளுடன்
JaffnaMuslimBase

No comments:

Post a Comment