Monday, March 12, 2012

யாழ் சின்னபள்ளிவாசல் விவகாரம்


மீண்டும் யாழ் சின்னபள்ளிவாசல் விவகாரம்

   அரபியில் ஒரு பழமொழி உண்டு. அது “மன் லாம லீமா”. பழித்தவன் பழிக்கப்படுவான். புரியவில்லையா!. யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக தெரிவினை நிராகரித்த வக்பு சபை மீண்டும் அதன் 15 உறுப்பினர்களையும் ஒன்று கூடி ஒழுங்கான முறையிலும் வக்பு சபை சட்ட திட்டங்களிற்கு அமைவாகவும் பொருப்பாளர்களை தெரிவு செய்யுமாறு கூறியுள்ளது. 


யாழ் சோனகதெருவில் வசிக்க விரும்பாத அதேவேளை சோனக தெருவிவகாரங்களில் அக்கறையுள்ளவர்களாக செயற்படும் குழுவினரின் தந்திரமான நிர்வாக சபை தெரிவினால் தாங்கள் நினைத்தவாறு தங்களுக்குள் தலைவர், பொருளாளர், செயளாலர் என பதவிகளை நியமனம் செய்து கொண்டனர். மஹ்ரிப்பின் பின் தெரிவு என முடிவான போதும் தாங்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு செல்ல வேண்டும் என கூறி அஸர் தொழுகையை அடுத்து ஒரு தலைப்பட்சமாக செயற்பட்ட இவர்களின் இந்த செயற்பாட்டிற்கு வக்பு சபை நல்ல பாடம் புகட்டியுள்ளது. இவர்களின் தெரிவு தொடர்பாக அதிருப்தியாளர்களும் அப்பகுதி மஹல்லாவாசிகளும் ஆட்சேபனை மனு செய்ததன் விளைவாகவே இந்த தீர்ப்பு வக்ப் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 


ஒரு தனி மனிதனின் ஆசா பாசங்களிற்காகவும், விருப்பு வெறுப்புக்களிற்காகவும் பள்ளிவாசலை அரசியல் மயப்படுத்தியது கவலை தரும் விடயாகும். அங்கு இமாமத் செய்யும் பைஸர் மௌலவி மீதான கோபமும், தவ்ஹீத் சிந்தனை சோனக தெருவினுள் உருவாக கூடாது எனும் காழ்ப்புணற்சியுமே மேற்படி நிகழ்வுகளிற்கு மூலகாரணமாகும்.

ஒரு உலமைாவை பார்த்து “காபிர்” என கத்திய காட்டுமிராண்டித்தனம் சோனக தெரு வரலாற்றில் இது வரை இடம்பெறவில்லை. இவ்வளவு குரோதம் நிறைந்த உள்ளத்திற்கும், மார்க்க அறிவின் அடிப்படையில் பிற்போக்குத்தனமான மூளைக்கும் சொந்தகாரரும் சின்ன பள்ளிவாசல் ட்ரஸ்டியில் இடம்பிடித்திருப்பது வக்பு சபைக்கே கலங்கம் விளைவிக்க கூடிய விடயமாகும். 

அற்ப உலக வாழ்க்கையில் தங்களிடம் இருக்கும் பண பலம், கல்வியறிவு, ஏனைய சில துறைசார்ந்த அறிவுகளை முற்படுத்தி தங்கள் சொற்களையே சமூகம் குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டும் என நினைப்பது சாத்தானிய குணங்களன்றி வேறில்லை.

ஏகத்துவக்கொள்கையை பெயரளவில் ஏற்றுக்கொண்டுள்ள இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் அதன் உண்மையான வடிவத்தை குர்ஆன் சுன்னா சொல்லும் முறையில் தெளிவுபடுத்தி, விளக்கங்களை முன்வைத்து, அறிவூட்டி அதன்படி வாழ்வதற்கு சமூகத்தை தயார்படுத்தும் செயற்பாட்டை வெறுக்கும் இந்த மனிதர்கள் தான் இவ்வாறான குழப்பங்களிற்கு மூலகாரணி.

எமது தொடரான அவதானிப்பில் புரிந்து கொள்வது என்னவென்றால், இவர்கள் ஒரு வகையான மனநோயாளிகளாவர். தங்களிற்கு மட்டுமே எல்லாம் தெரியும், தாங்கள் மட்டுமே எதையும் சரியாக செய்யக்கூடியவர்கள், தங்களிற்கே மற்றவர்கள் அடிபணிய வேண்டும், தாங்கள் சிந்திப்பது சரி, மற்றையவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத மடையர்கள் போன்ற மனமுரண் சிந்தனைகளிற்கு ஆட்பட்டவர்கள் இவர்கள். 

ஆனால் இவர்கள் எம் சமூகத்தவர். யாழ்ப்பாண சோனகர். இவர்களை வெறுத்து ஒதுக்குவதோ, மனநோயாளிகள் என புறந்தள்ளி வைப்பதோ தவறு. இவர்களை நாம் தான் திருத்த வேண்டும். நல்ல மனிதர்களாக, மற்றையவர்களை மதிக்க கூடியவர்களாக, அல்லாஹ்விற்கு மட்டும் அடிபணிந்தவர்களாக மாற்றுவது நம் கரங்களிலேயே உள்ளது. 

இவர்களின் இந்த உளப்பிரச்சனைக்காக இவர்களை ஏர்வாடிக்கு அனுப்ப முடியுமா என்ன? அங்கும் ஷிர்க், பித்அத், ஜாஹிலியத் போன்ற அன்றைய அரேபிய பழக்க வழக்கங்கள் நிறைந்துள்ளன. இவர்களை நாம் தான் சீர்திருத்த வேண்டும். நீர்கொழும்பில் இருந்தும் கொழும்பில் இருந்தும் வந்து பிரச்சனைகளை உண்டு பண்ணுவதையே வழக்கமாக கொண்டுள்ள இவர்களிற்கு சத்திய மார்க்கத்தை கற்க ஒவ்வொரு வாரமும் வரமுடியாவிடின் இன்ஷாஅல்லாஹ் நாம் வெகு விரைவில் ஒன்லைனில் சத்திய இஸ்லாத்தை எல்லோரும் கற்கும் இலகு பாடத்திட்டத்தை அறிமுக படுத்த இருக்கிறோம். அதன் மூலம் தங்கள் உள்ளங்களை சீர்திருத்தி சமூகத்தில் நற்பிரஜைகளாக மாறுவார்கள் என நினைக்கிறோம்.

No comments:

Post a Comment