Tuesday, March 20, 2012

சோனகதெருவில் ஒரு சம்பாஷனை!


Thanks - Muslim Base - UK

   


நடராஜா - “அடே மச்சான் மஹா! எங்கட இதுக்க வந்தனி. சோனவுதெருக்கே”

மகாலிங்கம் - “உடே நீ எப்படாப்பா வந்தனி. நான் நினைச்சனான் நீ  வெள்ளவத்தையில என்டு”

நடராஜா - “இல்ல மச்சான் வந்துண்டன். புள்ளையல் பிரான்ஸிலேயிருந்து கத்துகினம். அதான் வந்தனான்”

மகாலிங்கம் - “நானும் வந்துட்டன். அப்பார்ட்மென்டை நல்ல வாடைக்கு கொடுத்தனான். உப்ப வேலனைக்கு வந்துட்டன். இன்னும் நீர் இளவாளையிலோ?”

நடராஜா - “ஓம். அங்கதான். அது சரி உங்க ஏன் வந்தனி?”

மகாலிங்கம் - “ஓ அதா... சோனவுதெருக்கே ஒரு காணியை அவுப்பம் என்டு பாத்தநான். ரெண்டு மூனு கிடக்குது. வலத்துக்கு வரும். காக்கா தரமாட்டன் என்டு சொல்றான். நாலுருவாவ நாலு தரம் ஆட்டினா பல்ல காட்டுவான்”

நடராஜா - “சரியா சொன்ன நீ. நானும் அதே பிளேன் தான். ஆனா இப்ப காக்காமார் வலும் உஷார். மண் எங்குராங்கள். சோனகதெரு எங்குராங்கள். 
சம்மேளனம் எங்குராங்கள். புரோக்கர்மாரும் முன்ன மாதிரி இல்ல. எப்புடியாவது வாங்கோனும்”

மகாலிங்கம் - “சரியா சொன்ன நீ. காக்காமார் உப்ப முழிச்சுட்டாங்கள். விட்டா நம்மடா வேட்டிக்கு விலகேப்பினம். அதுக்கு முந்தி அவுக்கவேணும். பெரிசா வாங்கி அப்பார்ட்மென்ட அடிக்கோனும். அப்பாதான் பாருங்கோ புள்ளகுட்டியல் நாளைக்கு குடியிருக்கும்.

நடராசா - “ ஏன் உமக்கு ஊரில 10 ஏக்கர் கிடக்கே. அதில அடியுமென் அப்பார்ட்மென்ட”

மகாலிங்கம் - “ உடே உனக்கு விசரே. நாம எங்க இருந்த நாங்கள். வெள்வவத்தையிலும், பம்பலபிட்டியிலுமல்லே. கையுக்கே சாப்பாட்டு கடை, ரெஸ்டோரண்ட், “மஜாஸ் கிளப்”, வீடியோகடை, பெட்டா. ஊருக்கே உதுகள் இருக்கே? சின்ராசாட வெத்தில கடை தான் கிடக்கு. உது சரிவருமே நமக்கு. 20 வருஷமா அங்க இருந்து போட்டு ஊருக்கே கிடக்க ஏலுமோ.

நடராசா - “நல்லா சொன்ன நீ மச்சான். ஊருக்கே வந்து பாத்தா ஒரு மசுரும் இல்ல. நல்ல ஐடியா. சோனகதெருவுக்கே காணி எடுத்து வீடு கட்டினா டவுன் கிட்ட. ஒரு மிதியில பஸாருக்கு போட்டு வரலாம். என்ட பிளேனும் அதான்”

மகாலிங்கம் - “ டவுன அண்டின பகுதியெல்லாம் லோகாஸ்டுகளா கிடக்கு. சோனகதெருவில எடுத்தா சாதி சனத்தொட இருக்கலாம். நாவலர் றோட்டுக்கே தான் பாக்கிறன். சரிவரும். 10ரூபா கூட போனாலும் பரவாயில்லை நாவலர் ரோட்டுல வலைச்சு போடோனும்”

நடராசா - “சோனவனுக்குள்ள உப்ப முழிப்பு வந்துட்டுது. லண்டன் சோனவனும் காணி வாங்கப்பாக்குறான். நாவாந்துறையானும் பிரான்ஸ் காச வைச்சுக்கொண்டு ஓடுபட்டு திரியுரான். அவசரமாக வாங்க வேணும்.”

மாகாலிங்கம் - “ ஓமப்பு. கெதியா போ. நீ பாத்த காணிய 5ரூபா கூட அடிச்சாவது வாங்கு. சுணங்கினா சம்மேளனக்காரன் அத விக்க வேணாமெண்டு நெட்டுல போடுவான்.

உவன் காக்கா “தல” தான் காரணம். அண்டைக்கும் உவன்தான் சனியன். இன்டைக்கும் இவன்தான் சனியன். எங்கட சனம் காணிவாங்குரத உந்த சத்துராதி விடாமாட்டான். கெதியா போ மச்சான். நானும் வாரன்”.....

No comments:

Post a Comment