நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாண சோனக தெருவில் நடாத்தபட்ட சிலுவை யாத்திரை பற்றி நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். இதுவரை காலமும் இல்லாத புதிய நிகழ்வுகள் இவை. பேரணி செல்வது என்பது வேறு விடயம். ஆனால் அது யாழ் முஸ்லிம் பகுதிகளில் பல இடங்களில் தாமதித்து வழிபாடுகளை நடாத்தி, நடாத்தி செல்வது பல ஆச்சரியங்களை எம்மில் ஏற்படுத்துகிறது.
முஸ்லிம்கள் சோனக தெருவிலேயே அதிகம் புழங்குவதும் வசிப்பதும் முஸ்லிம் கல்லுரி வீதியிலேயே. அடுத்தது நாவலர் வீதியில். அதிக சன புழக்கம் உள்ள முஸ்லிம் கல்லுரி வீதியில் இவ்வாறான பவனி சென்றது பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லுரி முன்பாக நின்று நிலையெடுத்த கூட்டத்தினர் சரியாக ஒஸ்மானியாவின் வாசலில் பல நிமிட நேரங்கள் நின்று பிரார்த்தனை புரிந்து வழிபாடுகள் நடாத்தி சென்றுள்ளனர். இதன் அர்த்தம் என்ன?
யாழ்ப்பாண முஸ்லிம்களிற்கான அடையாளப்படுத்தல் என்பது யாழ் ஒஸ்மானியா கல்லுரியே. நிறுவனங்களாகட்டும், அமைப்புக்களாகட்டும், இணையங்களாகட்டும், சங்கங்களாகட்டும் எதுவாக இருந்தாலும் யாழ் ஒஸ்மானியாவின் சின்னத்தையே குறியீடாக கொண்டிருக்கின்றன. இன்றைய நிலையில் “ஒஸ்மானியாவின்” லொகோவே எம்மை அறிமுகப்படுத்தும் இணைப்பு சின்னமாக மாறியுள்ள வேளையில் அதை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட இந்த பேரணி பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன.
மேற்படி சிலுவை பயணத்தை ஒழுங்கு செய்தது யார்? திட்டமிட்டது யார்? தெரிந்து செய்தார்களா? அல்லது வழக்கம் போல நாம் மெத்தனமாக பார்க்கும் பார்வையின் அடிப்படையில் இது ஒரு சம்பவம் தானா? இந்த சிலுவை யாத்திரை யாழ் பேராயர் திரு தோமஸ் சொளந்தர நாயகம் என்பவரின் அறிவிற்கு உட்பட்ட வகையில் நிகழ்த்தப்பட்டதா? அல்லது இது தென்னிந்திய திருச்சபை மற்றும் ஏனைய கிறிஸ்தவ மதப்பிரிவினரின் செயலா? ஒஸ்மானியாவை உரிமை கோரும் நாளைய தங்கள் திட்டங்களிற்கான ஒரு ட்ரயல் நடவடிக்கையா? பல கேள்விகள் எழுகின்றன.
நாளைய ஒஸ்மானியாவின் முன் முற்றத்தில் மேரியின் சிலை வைக்கப்படுவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலின் முன்னோட்ட நடவடிக்கையா இது? இதில் யாருக்கு என்ன செய்தி சொல்ல வருகிறார்கள். கிறிஸ்வர்களிற்கு இதுவும் உங்கள் நிலமென்கிறார்களா? அல்லது தமிழர்களிற்கு நீங்கள் வாங்கிய போதும் என்கிறார்களா? முஸ்லிம்களே நாங்கள் வந்து விட்டோம் என்கிறார்களா? இல்லை ஒரு சாதானரண நிகழ்வுதான் இது என்கிறார்களா? புரியவில்லை.
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின்படி யாரும் எங்கும் பிரச்சாரம் செய்ய.லாம். அதை தடுக்கவோ விமர்சிக்கவோ எமக்கு உரிமையில்லை. சட்டங்களை நாம் மதிக்கின்றோம். ஆனால் இந்த அசாதாரண நிகழ்வுகள் சமூகங்களிற்கு மத்தியில் அச்சத்தை ஊட்டவல்லன. இவர்கள் சோனக தெருவால் பயணித்தது அல்ல விடயம். பயணிக்கட்டும். அது அரசாங்கத்திற்கு சொந்தமான வீதிகள் தான். ஆனால் மற்றைய சமூகம் அதனை அசாதாரணமாக உணரமுற்படுகையில் இது பற்றிய அவதானங்கள் அவசியம்.
யாழ் பேராயரை சந்தித்து இது பற்றிய தெளிவுகளை நாம் காண வேண்டும். அவர் சொல்லி செய்ததா அல்லது அவரது அறிவிற்கும் அப்பாற்பட்ட நிலையில் தீவிர செயற்பாட்டாளர்களின் செயலா என. எதுவாக இருந்தாலும் நாம் இது பற்றிய ஆழமான புரிதல்களிற்கு வரல் அவசியம்.
இஸ்லாத்தின் பார்வையில் மார்க்க மூன்று விதாமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள்.
- எம் நிலத்திற்காக போராடுதல்.
- இருக்கும் இடத்தை இஸ்லாமிய மயப்படுத்தல்.
- எம் நிலத்தை விட்டு விட்டு பிறிதொரு முஸ்லிம் பிரதேசத்தை தேர்ந்தெடுத்தல்.
No comments:
Post a Comment