Sunday, March 18, 2012
ஆஸ்திரேலியா: செனட் தேர்தலில் பிரதமர் ஜூலியா தொகுதியில் விக்கிலீக்ஸ் அசாஞ்சே போட்டி !
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளிட்டு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே. இவர் தற்போதுஇங்கிலாந்தில் உள்ளார். இவரைப் பற்றி தற்போது மேலும் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.அசாஞ்சே ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் செனட் தேர்தலில் போட்டியிடப் போவதாக டுவிட்டர் இணையதளத்தில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் அந்தத் தகவலில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜூலியா கில்லர்ட்டின் சொந்தத் தொகுதியான விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள லாலர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment