புத்தளம் போன்ற பிரதேசங்களில் யாழ்ப்பாண மாணவ, மாணவியரின் சிறந்த பெறுபேறுகளினாலும், பல்கலைகழக பிரவேசங்களாலும் உள்ளூர் பிரதேச நலன் விரும்பிகள் அதிருப்தியடைந்தமையும், யாழ் மாணவ சமுதாயத்தின் கல்வி கற்கும் பாங்கினைப் போன்று தங்கள் பிள்ளைகளையும் கல்வி கற்க வைக்க வேண்டும் என பல வழிகளிலும் முயன்றமை நாம் கல்விக்கு கொடுத்த முன்னுரிமையின் சான்றிதழ்களாகவே கொள்ள வேண்டும்.
பல நிலைகளிலும் இன்று கல்வி கற்று வெளியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் உயர்ந்தும், நிமிர்ந்தும் நிற்கிறார்கள். 20 வருட காலத்தில் நாம் கண்ட சொல்லிக்கொள்ள கூடிய அறுவடைகள் இவை. இப்போது மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. மீள்குடியேறுபவர்கள் தங்கள் குழந்தைகளை ஆவலோடு சேர்த்தது யாழ் ஒஸ்மானியா கல்லுரியில். ஆனால் ஒஸ்மானியா கல்லுரியின் நிலையோ தலைகீழாக மாறியுள்ளது.
முபாரக் - அதிபர் - B.A. - நளீமி
யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வியை கருத்தில் கொண்டு யாழ் ஒஸ்மானியா கல்லுரியின் அதிபராக பொருப்பெடுத்தவர் இவர்.. புலிப்பயங்கரவாதம் நாடு முழுவதும் வியாபித்திருந்த காலம். யாழ்ப்பாணத்தில் புலிகளின் பிஸ்டல் குழுக்கள் வலம் வந்த சூழ்நிலை அது. அந்த வேளையிலேயே அவர் அதிபராக பொருப்பெடுத்தார் யாழ் ஒஸ்மானியா கல்லுரியை. அந்த விடயத்தில் அவரது முடிவு பாராட்டுக்குரியதே.
அவர் அந்த முடிவிற்கு வர பிரதானமான காரணகர்தா மௌலவி சுபியான் ஆவார். யாழ் முஸ்லிம்களிற்காக முபாரக்கிற்கு முன்பே யாழ்ப்பாணம் பல முறை சென்று தங்கி, தரித்து சோனக தெரு முன்னேற்றம் அடைவதற்கான பல வேலைகளை பல மட்டங்களிலும் தனிமனிதனாக நின்று செய்து முடித்தவர். அவரின் அந்த செயற்திட்டங்களில் ஒன்று ஒஸ்மானியா கல்லுரி. அவரது முயற்சியிலேயே இவர் அதிபரானார். அவரது உந்துதலின் பேரிலேயே இவர் யாழ்ப்பாணம் சென்றார். அவரது ஆதரிவிலேயே இவர் கடமையாற்றினார்.
தியாக அரசியல்
முபாரக் அவர்கள் அதிபர் தரத்தில் உள்ளவரல்ல. சூழ்நிலைகளை சாதகமாக்கி அதிபரானவர். யாழ்ப்பாண முஸ்லிம்களை தேடி தேடி புலிகள் சுட்டுக்கொல்லும் காலத்தில் இவர் அதிபராக யாழ்ப்பாணம் செல்லவில்லை. மாறாக முஸ்லிம்கள் குடியிருக்கவும், வர்த்தகங்களில் ஈடுபடவும் புலிகளால் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் ஒஸ்மானியாவின் அதிபராக சென்றார். ஆனால் கழுத்து முனையிலும், நெற்றி பொட்டிலும் துப்பாக்கி வந்த போது அதிபராக உயிரையும் துச்சமென மதித்து சேவையாற்றியவர் என்ற ஏமாற்று அரசியலை இவர் பெயரில் செய்தவர்கள் புத்திசாலிகள். அந்த ஏமாற்று அரசியலையே தனது பதவியை தக்க வைக்க சமூகத்தின் முன் பாவித்த அதிபரும் புத்திசாலியே. ஆனால் பாவம் யாழ் சோனக சமூகம் மட்டும் இந்த வாதங்களால் மயங்கிப்போனது.
ஒரு ஆசிரியர் தரத்தில் இருக்கும் ஒருவர் அதிபராக வேண்டுமென்றால் கஷ்டப்பிரதேசத்திற்கு செல்வது ஒரு சாதாரண நடைமுறை. இது தான் ஒஸ்மானியா விவகாரத்திலும் நிகழ்ந்தது. உண்மையாக யாழ்ப்பாண சோனக தெரு மாணவர்கள் முன்னேற வேண்டுமெ நிணைத்தால், சிறந்த அதிபர் சேவையும், முகாமைத்துவமும் கிடைக்க வேண்டும் என நிணைத்திருந்தால் முபாரக் அவர்கள் விலகியிருப்பார்கள். ஆனால் விலகவில்லை. அடுத்தவர் தன்னை பகடைகாயாக்குவதும் புரிந்தும் புரியாத நிலை.
சரி நிர்வாக திறமை இருக்கிறதா என்று பார்த்தால் அடியோடு அதுவும் இல்லை. ஆளுமையற்ற அவரால் மாணவர்களை அடக்கி நிர்வாகிக்க முடியாகத இயலாமை பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. ஆசிரிய அசிரியைகளை ஈர்த்து பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கூடிய முகாமைத்துவம் செய்ய தக்க திறன் இல்லாதவர் அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம் குழந்தைகளையே எதிர்காலங்களில் பாதிக்கும். நிகழ்கால பாதிப்புக்களும் இருக்கவே செய்கின்றன.ஒழுங்காக பாடம் நடப்பதில்லை. கிட்டு மாமா சென்றிக்கு ஆட்களை அனுப்புவது போல நினைத்த வகுப்பிற்கு நினைத்த ஆசிரியரை அனுப்பும் அதிபரால் நேர சூசிகையை கூட முறையாக நிர்வாகிக்க முடியவில்லை. தன்னை ஆதரிப்பதாக பெற்றோரிடம் கையெழுத்து வாங்கும் மோசடித்தனத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் பற்றி என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
பாடசாலையில் இவரின் முகாமைத்துவம் தொடர்பான தவறுகள், கவனயீனங்கள், முட்டாள்தனமான முடிவுகள் என எராளமான விடயங்களை பட்டியலிடலாம். ஆனால் அவரை மலினப்படுத்துவது எமது நோக்கமல்ல. மாறாக அவர் இவற்றை உணர்ந்து உடன் பதவி விலக வேண்டும் என்பதே. தனது மகனை பொரளை வெஸ்லி கல்லுரியிலும், மகளை பம்பலப்பிட்டியிலும் அனுப்பி சிறந்த கல்வி கிடைக்க வழிவகை செய்த அவரது மூளைக்கு இருக்கும் ஒரே ஒரு பாடசாலையான ஒஸ்மானியாவை தான் சீரழிப்பது பற்றி விளங்காமல் போனது ஏன்? ஒன்று நிச்சயம். அவர் வேண்டுமென்றே பாடசாலையை சீரழிக்கவில்லை. பாடுபடுகிறார். அயராது உழைக்கிறார். ஆனால் அவரிடம் திறமையில்லை. ஆளுமையில்லை. முகாமைத்துவம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த புத்தியில்லை.
பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை தமிழ் பாடசாலைகளில் சேர்க்க முற்படுகின்றனர். ஒஸ்மானியாவில் இருந்து இடைநிறுத்தி வைதீஸ்வரா போன்ற பாடசாலைகளில் சேர்க்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நாளைய முஸ்லிம் இந்துக்களின் கலாச்சாரத்தில் உருவாகும் சூழலை உருவாக்குபவர் ஒரு நளீமி என்பது வேதனைக்குரிய விடயம்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்பார்பது தரம் 1 அதிபரையோ தரம் 2 அதிபரையோ அல்ல. தரம் 9 அதிபராக இருந்தாலும் பரவாயில்லை பாடசாலை முன்னேற்றப்பட வேண்டும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் ஒஸ்மானியாவின் தாரக மந்திரம் நிலை நிறுத்தப்படல் வேண்டும். சிறந்த கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடல் வேண்டும். பிள்ளைகள் ஸ்கொலர்ஷிப், சாதாரண தரம், உயர் தரம் போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும். பண்பான ஒழுக்கமான ஒரு இளைய சமுதாயம் உருவாக வேண்டும். இதுவே அவர்கள் அவா. இதுவே அவர்கள் கனவு. ஹாமீம் மாஸ்டரின் பெறுமதி முபாரக் இருக்கும் போதுதான் சரியாக தெரிகிறது என ஒரு தந்தை கூறிய வார்த்தை எம் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது.
அரசியல் கும்பல்
இவர்கள் தான் தங்கள் சொந்த விருப்பிற்காகவும் வெறுப்பிற்காகவும் யாழ் ஒஸ்மானியா கல்லுரி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாட துணிந்தவர்கள். தங்கள் பிள்ளைகளை தெற்கிலங்கையின் சிறந்த பாடசாலைகளிற்கு பக்குவமாக அனுப்பி விட்டு ஒஸ்மானியா விவகாரத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனை பண்ணுபவர்கள். யாழ் சோனக தெருவில் தடம் பதிக்க எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் ஒஸ்மானியாவை மையப்படுத்தி தங்கள் அரசியல் இருப்புக்களை பேண முற்படுபவர்கள்.
இவர்களே அதிபர் முபாரக்கிற்கு தைரியம் தருபவர்கள். இவர்களே இவரின் இடமாற்றத்தை இடை நிறுத்தியவர்கள். இவர்களே பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை ஊணமாக்கியவர்கள். இவர்களே வெளி பிரதேச அரசியல்வாதியை யாழ் முஸ்லிம்களின் விவாகரத்தில் உள்வாங்கியவர்கள். அவர் மூலமாகவே இவர்கள் இன்றும் ஒஸ்மானியா விவகாரத்தில் தடைகளை ஏற்படுத்துபவர்கள். இவர்களே எந்த உரிமையும் இல்லாமல் அதிபர் தேவை என்று விளம்பரம் செய்து தோற்றுப்போனவர்கள். இவர்களாளேயே இன்று யாழ் முஸ்லிம் சமூகம் கல்வியில் சீரழியும் நிலையை நோக்கி செல்கிறது.
இவர்கள் யாழ் முஸ்லிம்களிற்காகவே உழைக்க முன்வந்தவர்கள். அது உண்மையில் பாராட்டத்தக்க விடயம். தங்களிற்கு சிறந்த வாழ்க்கை தொழில் போன்ற அனைத்தும் இருந்தும் அதையும் தாண்டி யாழ் முஸ்லிம்களிற்காக தொழிற்பட முன்வந்தவர்கள். ஆனால் அவர்கள் சிந்தனைகள் சுயநலமிக்கவையாகவும், ஏதேச்சாதிகாரமிக்கவையாகவும் இருப்பதே இங்கு பிரச்சனை. இவர்கள் மாற வேண்டும். தங்கள் தடங்களை மீளாய்வு செய்ய வேண்டும். தங்கள் அரசியல் கோல்களை அடிப்பதற்கு சமுதாயத்ததை குழப்ப முற்படுவததை தவிர்த்து கொள்ள வேண்டும்.
பொது விடயங்களில் ஒன்றுபட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே இலக்குகளை அடைய முடியும். பலமான கூட்டணி எம்மிடம் அவசியம். இன்று நாம் எதிர் நோக்குபவைகள் பிரச்சனைகளே அல்ல. இனியே பிரச்சனைகள் வரவிருக்கின்றன. அவற்றை முகம்கொடுக்க வல்ல பொறிமுறை அமைப்பை நாம் கட்டியெழுப்புவோம். பணம், கல்வி, அதிகாரம் போன்றவை சொற்ப அளவே துணைநிற்க வல்லவை. இவற்றின் இறுமாப்பில் நாம் எம்மை இழப்பது தவறு.
நாளைய யாழ்ப்பாணத்தில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் சிறந்து முன்னுதாரண சமூகமாக நாம் மாற வேண்டுமென்றால் நாம் எம்மிடையே பல மாற்றங்களை செய்ய வேண்டும். அந்த மாற்றங்களின் ஒரு முதல் அடியாய் அதிபர் முபாரக் அவர்களை வெளியேற்றி பாடசாலைக்கான ஒரு தரமான அதிபரை நியமிக்கும் முயற்சியில் ஒன்று பட்டு செயற்படுவோமாக.
No comments:
Post a Comment