தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றும் இன்றும் 17,18 ம் மட்டக்களப்பில் இடம் பெற்றுகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதியமைச்சர் ஜகத் புஸ்பகுமார பாராளுமன்ற உறுப்பினாகளான பைசால் காசீம் விஜேசேகர ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர் .
Thanks : lankamuslim
படங்கள் F.M.பர்ஹான்
No comments:
Post a Comment