Tuesday, March 27, 2012

ஜெனிவாவில் இஸ்ரேலை பந்தாடிய பாகிஸ்தான் - முருங்கை மரம் ஏறாத வேதாளத்தின் கதை..



by: Abu Maslama      ஜெனீவாவில் இலங்கையின் விவகாரங்கள் பற்றிய அனல் பறக்கும் செய்திகளிற்கும், மனிதாபிமான தேசம் அமெரிக்காவின் வெற்றிகளிற்கும் ஊடகங்கள் களமமைத்து களைத்துப்போன நிலையில் ஜெனீவாவில் இன்னொரு விடயம் மெல்ல நடந்து முடிந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ராட்சஸ ஊடகங்கள் மௌனம் காக்கின்றன. பேசமுடியாமல் திகைத்து போய் நிற்கின்றன. திகைக்கத்தானே வேண்டும். தோற்றுப்போனது பினந்தின்னி வல்லுறு அமெரிக்காவல்லவா!.

இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான சட்டவிரோக குடியேற்றங்கள், இராணுவ வன்முறைகள், பலப்பிரயோக அடாவடித்தனங்களை கண்டித்து முன்வைக்கப்பட்ட பிரேரனையை 26 நாடுகள் ஆதரித்து, 10 நாடுகள் நடுநிலை காத்து, 01 நாடு மட்டுமே எதிராக வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலிய ஸியோனிஸ அரசிற்கு ஆதரவாக வாக்களித்தது அமெரிக்கா மட்டுமே. பிரேரனையை கொண்டு வந்த தேசம் “பாகிஸ்தான்”. விழிப்புருவங்கள் பாகிஸ்தான் பிறையை போல வளைகின்றதா?  பாக்கிஸ்தானா இப்படி என்று!. ஆம் அபோதாபாத்திற்கு ஜெனீவாவில் செக் வைத்துள்ளது பாக்கிஸ்தான்.

ஜெனரல் ஷியா உல் ஹக்கிற்கு பின்னர் பாகிஸ்தான் இப்போது இரண்டாவது முறையாக தன்னை முஸ்லிம் தேசம் என நிரூபித்துள்ளது. முன்னைய நிரூபணம் கார்கில். ஊழல், குண்டுவெடிப்பு, அரசியல் முரண்பாடு என அல்லோலகல்லோபடும் தேசத்தில் அமெரிக்க எதிர்ப்பு எனும் விடயத்தில் எல்லாமே அமைதியாகி விடுகின்றன. பட்டாணியும், சிந்தியும் ஒன்றுபடும் ஒரே ஒரு விடயம் இந்த அமெரிக்க எதிர்ப்பு என்பதே. மௌலான பஸ்லுர் ரஹ்மானால் செய்ய முடியாததை அமெரிக்காவின் ஒரு ட்ரோன் விமான குண்டு வீச்சு செய்து முடித்து விடுகிறது. அது தான் பாக் மக்கள் ஒரு புள்ளியில் ஒன்றினைதல். இதே விடயம் ஆப்கானில் அமெரிக்க சிப்பாய்களால் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட போது ஆப்கானியர்களை ஒன்றுபடுத்தியது.

ஜெனீவாவில் உள்ள பாகிஸ்தான் பிரதிநிதிக்கு பிரேரணை தினம் ஜெனரல் கியானியிடம் இருந்து பதின்மூன்று தொலைபேசி அழைப்புக்கள் வந்த போதே பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பது தெளிவாகிவிட்டது. பாகிஸ்தான் பிரேரணையை விடவும் முக்கியமான விடயம் இஸ்ரேலிய எதிர்ப்பு என்பதில் உலக நாடுகள் ஒரு கருத்தில் உடன்பட்டமை.

இது இஸ்ரேலிய இராஜதந்திரத்திற்கும், அதன் சர்வதேச முகத்திற்கும் விழுந்த பேரிடி. பயங்கரவாத தேசம் எது என்பதை ஜெனீவா உண்மையில் இங்கு தான் நிரூபித்தது. திரிசங்கு சொர்க்கம் என்பார்கள். இந்த நிலை அமெரிக்காவிற்கு. உருட்டி வெருட்டி ஏனைய நாடுகளை வசப்படுத்தி இலங்கை மீது மனித உரிமை மீறல் பற்றி கொக்கரித்த அமெரிக்காவிற்கு அதன் சகோதர தேசம் இஸ்ரேலின் மீதான பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை அதிர்ச்சியளிக்கும் விடயம். அதுவும் பாக்கிஸ்தான் களமிறங்கும் என அது எதிர்பார்க்கவேயில்லை.

பாகிஸ்தானின் இந்த துணிகரமான இராஜதந்திர நகர்த்தல்கள் ஆசியாவிலும் ஒரு துருவ நட்சத்திரம் இருக்கும் பிரேமையை எம்முள் கொண்டு வந்து நிறுத்துகிறதெனலாம்.

No comments:

Post a Comment