யாழ்ப்பாண சோனக தெரு. இலங்கையின் பூர்வீக முஸ்லிம் குடியிருப்புக்கள் உருவான காலத்திலேயே அராபியரால் உருவாக்கப்பட்ட பிரதேசம். ஆனால் வரலாற்று ஏடுகளில் அவை சரியாக பதியப்படவில்லை. பிரகாசிக்கவும் இல்லை. தமக்கென ஓர் ஒழுங்கான கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பேணிய சமூகம் அங்கு வாழ்ந்தது. கடுமையான உழைப்பு, முயற்சி மிக்க உழைப்பு, வினைத்திறன் மிக்க உழைப்பு என தங்கள் வாழ்வாதரங்களை தேடிய சமூம் யாழ்ப்பாண முஸ்லிம்கள். வரண்ட மண்ணில் அரசாங்க உத்தியோகங்களை புறந்தள்ளி சிறு வணிகம் மூலமும், கைத்தொழில்கள் மூலமும் தன்னிறைவு கண்ட சமுதாயமாக வாழ்ந்தவர்கள்.
இங்கிருந்து பிற பிரதேசங்கள் சென்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தேவை அவர்களிற்கு இருக்கவில்லை. தங்கள் பெண்களை மத்தியகிழக்கில் பணம் சம்பாதிக்க அனுப்பும் தேவையும் இருக்கவில்லை அவர்களிற்கு. கடின உழைப்பு. அந்த உழைப்பை போக்கும் களைப்பாறுதல்கள். சுவையான உணவு. சுகமான வாழ்வு எனும் ஒரு அற்புதமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் அவர்கள். இதெல்லாம் 1990-10-30 இற்கு முந்திய நிழற்படங்கள். இப்போது நினைத்தாலும் உற்சாகம் கரைபுரண்டோடும் காலங்கள் அவை. கூடவே கண்ணீரும் கரைபுரண்டோடும்.
தமிழர் விடுதலை போராட்டம் எனும் இலக்கில்லாத கூட்டு ஆயுத வன்முறையின் விளைவு சோனக தெரு முஸ்லிம்களின் வெளியேற்றம். 20 வருட அகதி வாழ்வின் பின்பு யாழ்ப்பாணம் வந்து பார்த்தால் அங்கு அவர்களிற்கு எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. அகதியாக வாழும் காலத்திலேயே பல வீடுகள் விற்கப்பட்டுவிட்டன. வீடுகளை மீள்திருத்தும் அளவிற்கு பணவசதியில்லை. வெறுமனே காணிகளை வைத்திருக்காமல் நிகழ்கால தேவைகளிற்காக அவற்றை விற்கும் மனோநிலைக்கு வந்துள்ளது சமூகம்.
முஸ்லிம்களின் இந்ந பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் இனவாத மற்றும் கிறிஸ்தவ இனவாத சக்திகள் சோனகதெரு மண்ணை விழுங்கும் ஒரு கொலைக்களத்தை திறந்து விட்டுள்ளன. சட்டரீதியாக மண்ணை சுரண்டும் இவர்களது கைங்கரியங்களிற்கு மேற்கைரோப்பாவில் இவர்கள் திரட்டிய யூரோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல இலட்சம் மேலதிக பணத்தை செலவழித்து சோனக தெருவை ஏப்பம் விடும் இந்த நாசகார திட்டம் தொடராக நிகழ்த்தப்படுகிறது.
தங்கள் மதவாத நடவடிக்கைகளை செய்ய முனைப்பாக மிஷனரிகளும், கரசேவைகளும் நிகழ்கின்றன. பிரச்சார மையங்களை நிறுவ காணிகளை இலக்கு வைத்து கழுகுகளாக வட்டமிடுகின்றனர். அதனை தடுக்க முடியாத கோழிக்குஞ்சுகளாக நாம் முடிந்த வரை போராடுகின்றோம். மரணம் வரையும் போராடுவோம்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் பூர்வீக மண்ணை காப்பாற்றும் நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இல்லை. அவர்களின் பொருளாதார பலம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கையின் பிற பிரதேச முஸ்லிம் சகோதரர்கள் சோனக தெருவின் காணிகளை வாங்கி முஸ்லிம் பிரதேசத்தையும் அதன் மஸ்ஜித்களையும் காக்கும் தார்மீக பொருப்பை ஏற்க வேண்டும் என நாம் கோருகிறோம்.
யாழ் சோனக தெருவில் கொள்முதல் செய்யப்படும் வீடுகள், நிலங்கள் என்பன வெறுமனே முடக்கப்படும் பணமல்ல. எதிர்காலங்களில் இன்னொரு முஸ்லிமிற்கு மிகச்சிறந்த விலையில் விற்ககக் கூடிய வளமான முதலீடுகளாகும்.
யாழ் நகர வர்த்தகம் என்பது இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விடவும் செழிப்பானது. பணம் உடனடியாக புரளக்கூடிய தன்மைகளை கொண்டது. பிற மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள் தங்களிற்கென ஒரு வீட்டினை வாங்கி தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள சோனக தெரு சிறந்த இடமாகும். ஏனெனில் 1 கிலோ மீற்றர் தொலைவிலேயே யாழ் பஜஸார் காணப்படுகிறது.
புனித இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு எத்தனையோ இந்துக்கள் தயாராக உ்ள்ளார்கள். சோனக தெருவின் இல்லங்களை வாங்கி சீர்திருத்தி அவர்களிற்கு வாடகைக்கு விடக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது. எதிர்காலங்களில் அவர்களிற்கே இந்த இல்லங்களை அதிக விலைக்கு விற்க கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம்.
தெற்கிலங்கையில் உருவாகியுள்ள இலங்கை முஸ்லிம்களிற்கு எதிரான பல இனவாத நடவடிக்கைகள் எந்த ரூபம் எடுக்கும் என்பதை நாம் அறியோம். அவ்வாறான ஒரு துர்அதிஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டால் முஸ்லிம்களை உள்வாங்க தக்க நிலம் யாழ்ப்பாண சோனக தெருவும் அதையண்டிய நிலங்களுமாகும்.
இஸ்லாத்தை தழுவும் சிங்கள மக்களை அங்கு பேண முடியாத நிலை உருவானால் அவர்களி்ற்கான பாதுகாப்பு அரணாக சோனக தெரு மாற வாய்ப்புக்கள் உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பௌத்த மக்களிற்கான மார்க்க பயிற்சிகளை எந்தவிதமான இனவாத இடையூறுகளும் இல்லாமல் சோனக தெருவில் வழங்க முடியும். இந்த விடயத்தை அந்நிதா பவுன்டேஸன், ஹிறா பவுண்டேஸன், எத்னிக் ஸ்டடி போரம் போன்ற தஃவா இயக்கங்கள் கருத்தில் கொள்வது சிறப்பானது.
இந்தியாவுடனான தரை வழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து பற்றிய எதிர்கால பாக்கு நீரிணை திட்டங்களை மையப்படுத்தி கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச வர்த்தகர்கள் யாழ் சோனக தெருவில் ஒரு இடத்தை பேணிக்கொள்வது எதிர்கால் வர்த்தகங்களில் கை கொடுக்கும் வாய்ப்புக்ள்ள் உள்ளன.
சிறந்த சுவையான உணவு, சுகாதாரமான வாழ்க்கை ஒழுங்குகள், ஒசோன் தாக்கமற்ற, தொழிற்சானை இரசாயன தாக்கங்கள் அற்ற சிறந்த இயற்கையுடன் ஒன்றிய குடா நாட்டில் எமக்கான ஒரு இடத்தை நிறுவ முடியும்.
கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதரர்களே... புலி பாசிஸத்தின் கொடிய வழி என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களின் அதே வழியை பொருளாதார ரீதியாக பாரிய அளவில் எதிர் கொண்ட சமூகம் தான் நாங்கள். அந்த வகையில் நீங்கள் தெஹிவலை, மட்டக்குளி, வெல்லம்பிட்டி போன்ற பிரதேசங்களில் காணிகள் வாங்கும் அதே முறைமையை யாழ்ப்பாண சோனக தெருவிலும் முதலீடாக செய்யுமாறு கோருகிறோம்.
இது தொடர்பாக அனைத்து முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், போன்றவற்றிற்கும் நாம் கோரிக்கை விடுகிறோம். ஒரு ஆரம்ப கால அராபிய வர்த்தகர்கள் வந்து தரித்து முஸ்லிம்களை உருவாக்கிய தளமான யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி உங்கள் செயற்பாடுகளை விஸ்தரியுங்கள். அதன் முதற் கட்டமாக சோனக தெருவின் காணிகள் தமிழர்களிற்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். சோனக தெருவின் காணிகளை வாங்குவது பற்றி ஏனைய முஸ்லிம் செல்வந்தர்கள், புத்திஜீவிகள் போன்றவர்களிற்கு அறிவூட்டுங்கள். சமூக பொருப்பு பற்றி எடுத்து கூறுங்கள். யாழ் சோனக தெருவில் காணிகளை வாங்கி குறைந்த பட்சம் முதலீடாகவாவது முடக்குங்கள்.
ஓ..... இலங்கை முஸ்லிம்களே!!............ ஒரு பிரதேசம். முஸ்லிம் பிரதேசம் நம் கண்முன் இல்லாமல் போகிறது. நாம் வாழும் காலத்திலேயே அங்கு சிலை வணக்கங்கள் உருவாகப்போகிறது. கோயில்களும், சர்ச்சுகளும் சுதந்திரமாக தங்கள் மணிகளை ஒலிக்கப் போகின்றன. மஸ்ஜித்களும், பாங்கொலி சொல்லும் மினராக்களும் மொளனிக்கப் போகின்றன. மையவாடிகளில் பிரேதங்கள் எரிக்கப்பட போகின்றன. இந்த நிகழ்வுகளிற்கு நாம் பொருப்பு தாரிகள். பலஸ்தீன மண்ணை ஏப்பம் விட்ட ஸியோனிஸ யூதர்களைப் போலவே தமிழர்கள் செயற்படுகின்றனர். இதை தடுப்பது உங்கள் கடமை.
பல இலட்சங்கள் செலவழித்து திருமணம் நடாத்துகிறோம். பல மில்லியன்களை முடக்கி வாகனங்களை வாங்குகிறோம். தெரியாத வியாபாரங்கள், புரியாத வர்த்தங்களில் பணத்தை போடுகிறோம். இவை திரும்பி வரப்போவதில்லை. ஆனால் சோனக தெருவை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில் நீங்களும் பங்குதாரிகளாக மாறும் போது அது உங்களிற்கு பன்மடங்காக திரும்ப கிடைக்க வழி சமைக்கிறது. இஸ்லாத்தை உயிர்ப்பித்த உன்னதமானவர்களாக நீங்கள் நிமிர்ந்து நிற்பீர்கள்.
எமது இந்த கோரிக்கையானது ஒரு மனிதன் உயிரிற்கு போராடும் போது கேட்கும் தண்ணீரை போன்றது. நாம் இறைவனிற்கு அடுத்தபடியாக முஸ்லிம் சகோதரர்களாகிய உங்களிடம் வேண்டுகிறோம். இந்த முஸ்லிம் மண்ணை மீட்கும் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். உங்களிற்கு என்று ஒரு வீட்டினை சோனக தெருவில் வாங்குவதன் மூலம் அந்த பங்களிப்பிற்கு சாட்சியாளர்களாக மாறுங்கள்.
அன்புடன் யாழ் முஸ்லிம்கள் சார்பாய்......
No comments:
Post a Comment