இலங்கை தான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போரை வெற்றி கொண்ட போதும் அமைதியை இழக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டின் "இந்திய தேசிய பாதுகாப்புச் சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முடிவில் கூட்டணி அரசியல் தாக்கம் இருந்தது என்று பலர் சொல்லலாம். ஆனால் இறுதியில் அது தேசிய நலனை நோக்காகக் கொண்டதாகவே அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கூறியவற்றை செய்யவில்லை. இலங்கை செய்தது போதுமாக இல்லை என்பதன் அடிப்படையிலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் செயலக இராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
Thanks: Veerakesari
No comments:
Post a Comment