ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தங்களது தனிப்பட்ட காரணங்களை குறித்த இரு ஊடகவியலாளர்களும் ஐரோப்பாவில் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
'யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினார். அங்கு அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளால் சிலரால் தாக்கப்பட்டார்.
அவ் ஊடகவியலாளர் இச்சம்பவத்தை புகலிடக்கோரிக்கைகளுக்காக அவர் பயன்படுத்திக்கொண்டு, ஊடகவியலாளர்களுக்க எதிரான வன்முறையாக காண்பித்தார்' என அமைச்சர் கூறினார்.
மற்றொரு ஊடகவியலாளரை யாழ் மாநகர சபையிலுள்ள உள்ளூராட்சி அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட பகைமை காரணமாக தாக்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், இந்த இருவரைப் பற்றியும் சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment