டீகுடிக்க இடைகால் , குளிக்க குற்றாலம் , இரவு சாப்பாடிருக்கு புளியங்குடி என்று செல்லும் நாம் ..
வறுமையிலும் இறை நம்பிக்கையை விடாத இவர்களுக்காக என்ன செய்ய போகிறோம் ..
யா அல்லாஹ் ! இந்த மக்களின் துயரத்தை நீக்குவாயாக ! இவர்கள் படும் வேதனையை முழுமையாக நீக்குவாயாக !

நீ வழங்கும் இந்த சோதனையை எதிர்கொள்ளும் ஆற்றலை நீ அவர்களுக்கு தருவாயாக! .. இந்த சோதனையில் எங்களை போன்ற உலக முஸ்லிம்களுக்கும் பங்குண்டு.. இவர்களை கொண்டு நீ எங்களையும் சோதிக்கிறாய் ஆதலால் அவர்களின் துயரத்தை துடைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தருவாயாக ...!
அவர்களுக்காக செல்வதை வாரி இறைக்கும் மனதை எங்களுக்கு தருவாயாக !
சோமாலியாவை பொருத்தவரை அவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது அடிப்படை வசதி கூட இல்லை அவர்களிடம்... ஆனால் அல்லாஹு அக்பர் அவர்களின் ஈமானை அல்லாஹ் பலமாகவே வைத்திருக்கிறான்..
ஒரு சிறு விஷயத்திற்கு நாம் நிராசை அடைந்து விடுவோம் தெருவுல மனை , ரோட்டடி மனை , வாங்க , பங்களா வாங்க கஷ்டபடுறோம் ஆனால் அந்த மக்கள் சோறு தண்ணிக்கு கஷ்ட படுறாங்க... ஆனாலும் அவர்களை பாருங்கள்..
நாம் வெக்கப்பட வேண்டும்..
No comments:
Post a Comment