Saturday, March 10, 2012

பர்தா அணிந்து செல்லும் பெண்களின் முகத்தை பார்க்க பொலிஸாருக்கு அனுமதி


அவுஸ்திரேலியாவில் முஸ்லிம் பெண்கள் அணிந்து செல்லும் பர்தாவை விலக்கி, அடையாளம் காண்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

அவுஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து செல்கின்றனர்.

இவ்வாறு செல்வதினால் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.


இதையடுத்து பர்தா அணிந்து செல்பவர்கள், ஹெல்மட் அணிந்து செல்பவர்கள் யார் என்று அடையாளம் காண நீதித்துறை மற்றும் பொலிசாருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது

No comments:

Post a Comment