Tuesday, March 20, 2012

EPRLF, TELO, TULF, PLOTE கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு… தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) பதிவு செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்…!!!



தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, த.வி.கூ, புளொட் அடங்கிய நான்கு கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு ஒன்று கடந்த சில நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இவ் சந்திப்பில் தமிழரசு கட்சியினர் பங்குபற்றாதபோதும், அவர்களை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வது குறித்து பேசப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்றும், இது குறித்து நாடு திரும்பியவுடன் தீவிரமான நடவடிக்கைகளை தான் முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்குரிய அழுத்தங்களை புலம்பெயர் தமிழ்மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment