Sunday, April 29, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சென்னையில் ஆர்ப்பாட்டம் 100ற்கும் அதிகமானோர் கைது..


 


தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் தினத்தந்தி இணையம் வெளியிட்டுள்ள புகைப்படத்துடனான செய்தி கீழே... (தேசிய பாதுகாப்பு கருதி சில சொற்கள் செம்மை செய்யப்பட்டுள்ளன)

இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 


கவனிக்கவும்: இப்படியான  வேலை இலங்கை முஸ்லிம்களை பதிக்கும்..

No comments:

Post a Comment