யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் இந்த மாணவி பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் இவரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Nerupu
No comments:
Post a Comment