தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை
கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள்.. இந்த விடயத்தை வைத்து கலவரங்களை உண்டாக்குவது அல்ல புத்தி சாலித்தனம், நிதானமாக இதை கையாள வேண்டும்... இதை ஒரு பொறியாக வைத்து, எங்கள் முழு சமுதாயத்தையும் இவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள்.. நாங்கள் அவரசப்ப...ட்டு கலவரங்களை உண்டாக்கினால்... அதை பெரும் பிரச்சினையை போல் உலகுக்கு காட்டி... இதை சாட்டாக வைத்து... இன்று மஸ்ஜிதில் மட்டும் கை வைத்தவர்கள்..... நாளை எங்கள் முழு சமுதாயத்துக்கும், பெரும் பிரச்சினைகளை தருவார்கள்..... தூர இடங்களில் தனித்து வாழும் முஸ்லிம்கள் நிறைய்ய பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டி வரும்.. அநியாயமாக எங்கள் பெண்கள் மானபங்கப்படுத்தபடுவார்கள் ... முஸ்லிம்களின் உடமைகள் பறிக்கப்படும்... இந்த நிலைமை நாளுக்கு நாள் அதிகரிக்கும்... இன்று ஒரு பிரச்சினையாக இருக்கும், இந்த விடயம், நாளை பல பிரச்சினையாக மாறிவிடும்.. எங்கள் அவசர புத்தியால் நாங்கள் முநேடுக்கும் செயல்பாடுகள், நாளை எங்களுக்கு பெரும் நஷ்டத்தை கொண்டு வந்து விடக்கூடாது......... அதற்காக நாம் சும்மா இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை.. எங்கள் உரிமைகளை கலவரங்கள் செய்யாமல்.. எங்களின் அவசர புத்தியால் எங்கள் முஸ்லிம் சகோதர சகோதரிகள், குழந்தைகள், வயோதிபர்கள் பாதிக்க படாமல், நிதானமாக அவர்களின் பொரிக்கு மாட்டிக்கொள்ளாமல் தந்திரத்தால் இந்த பிரச்சினையை வெல்ல வேண்டும்... அல்லாஹ் எங்களுக்கு துணை புரிவானாக...
No comments:
Post a Comment