Friday, April 27, 2012

இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் ?


Thanks : LankaMuslim

AC.நவாஸ்தீன்: இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுவதாக தெரிவிக்கபடுகிறது . கடந்த சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினரும்Video நிகழ்ச்சி நடத்துபவருமான ஸ்ரீ ரங்கா இலங்கையில் முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வர இருப்பதற்கான வாய்ப்பை தகவல்கள் காட்டுவதாக தெரிவித்துள்ளார் .
முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாகஇ சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. 2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.
எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது. எனினும்இ தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையா முஸ்லிம்

No comments:

Post a Comment