"இலங்கை வாழ் முஸ்லிம்களே! நீங்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர், நீங்கள் தனித்தவர்கள் அல்லர் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எங்களில் ஒரு பகுதியினர்,
நாங்கள் உங்களில் ஒரு பகுதியினர், தனித்துவம் காத்து பெரும்பான்மையினருடன் சேர்ந்து வாழுங்கள் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள், உங்களது இஸ்லாமிய ஆளுமையை இழந்து விடாதீர்கள், சர்வதேச முஸ்லிம் உம்மத்துடனும், அண்டை அயல் நாடுகளிலுமுள்ள முஸ்லிம் சமூகங்களுடனும் நீங்கள் உறவுகளை வலுப் படுத்திக் கொள்ளுங்கள்,
நீங்கள் ஜாமாத்தே இஸ்லாமியினராக, தப்லீகிகளாக, இக்வாநிகளாக இன்னும் இன்னோரன்ன இஸ்லாமிய அமைப்புகளாக பல்வேறு இஸ்லாமிய கலாபீட பட்டதாரிகளாக இருந்தபோதும் எமது நலன்கள் பொதுவானவை, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை என்பதனை மறந்து விடாதீர்கள், நீங்கள் அவற்றிற்குமுன்னால் ஒரு மனிதரைப் போன்று ஒற்றுமைப் பட்டு செயற்படுங்கள்,
சிறுபான்மையினர் என்றால் பலவீனமானவர் என்று தாழ்வு மனப் பான்மை கொள்ளாதீர்கள், வேற்றுமைகள் நிறைந்த பெரும்பான்மையினர் மத்தியில் ஒற்றுமையுள்ள சிறுபான்மையினர் பலம் வாய்ந்தவர்கள் என்பதனை உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம், முஸ்லிம் உலகம் இருக்கிறது அந்த உறவுகளை நீங்கள் கட்டி எழுப்பிக் கொள்ளுங்கள், உங்களது அழைப்புகளுக்கு செவிமடுக்க ஒரு ஈமானிய சமுதாயம் இருக்கிறது".
அல்லாமா யூஸுப் அல் கர்ழாவி - தலைவர் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம்
No comments:
Post a Comment