Wednesday, April 18, 2012

யாழ். மேதினக் கூட்டத்தை வாபஸ் பெறும் முயற்சியில் ஐதேக - மைத்திரி தகவல்


யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிட்டுள்ள மே தினக் கூட்டத்தை அங்கிருந்து வாபஸ் பெற ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் தாம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்தை சீர்குலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென எதிர்கட்சி பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க ஊடகங்களுக்கு கூறியுள்ளதாகவும் அதனை நம்பத் தாம் தயார் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் அவ்வாறு கூட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்குமாயின் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டார். 

ஆனால் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டம் வைத்தால் அது வெற்றியளிக்காது என அறிந்து கொண்டுள்ள ஐதேக தற்போது கூட்டத்தை அங்கிருந்து வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக மைத்திரி குணரத்ன கூறினார். 

அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுக்க சிறந்த எதிர்கட்சி அவசியம் எனவும் ஆனால் தற்போதுள்ள எதிர்கட்சி வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
Thanks Adadadruna 

No comments:

Post a Comment