Monday, April 30, 2012

புலித் தமிழ் தேசியத்தின் போலிப் பரப்புரைகள்


ஏ.அப்துல்லாஹ்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இரண்டகாக பிளவு பட்டுள்ளதாக மிகைப் படுத்தப்பட்ட போலியான பரப்புரைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசில் இருந்து விலகப் போவதாகவும் உள்நோக்கம் கொண்ட பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழ் ஊடங்களில் இத்தகைய தகவல்கள் வெளிவந்துள்ளது.
 அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தன்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் விடயத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தை பாதுகாப்பதாகவும் அதன் நடவடிக்கைகள் போதாது என்றும் ஜம்இயதுல் உலமா மெதுமையான போக்கை கடைப்பிடிப்பதாகவும் இருவர் கருத்து முரண்பாட்டை வெளிப்படுத்தினர் ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரினர் இதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா நோன்பு மற்றும் முற்றவெளி பிராத்தனை ஆகிய வற்றுக்கு அழைப்பு விடுத்தாலும் அமைதியாக முறையில் மேற்கொள்ளபடும் எந்த பேரணிக்கும் அமைதி ஆர்பாட்டதிற்கும் அவைகள் செய்யப்படக் கூடாது என்று அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களில் அமைதியான ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றது .பல இடங்களில் அமைதியான ஆர்ப்பாட்ட பேரணிகளில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிராந்திய கிளைகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றினர் . ஆனால் இவற்றை சில ஊடங்களில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இரண்டாக பிளவு பட்டுள்ளதாகவும் ஒருசாரார் நோன்பு , துவா என்று இருக்க மற்ற சாரார் ஆர்பாட்டங்களில் இறங்கியதாகவும் தெரிவித்துமுஸ்லிம்களை பிளவு படுத்தி தமது அணிக்கு முஸ்லிம்களை சேர்க்கும் தந்திரோபாயத்தை மேற்கொண்டு வருகிறது.
ஒரு சிலர் முரண்பட்டு தம்மை ‘இலங்கை ஜம்இயதுல் உலமா’ என்று தெரிவித்தாலும் அவர்கள் பெயரில் மேட்டுமே ஜம்இயதுல் உலமா இருக்க முடியும் என்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் இதனை முஸ்லிம் தரப்பு அலட்டிகொள்ளவில்லை.
இதற்கு முன்னர் பல தடவைகள் சில அரசியல்வாதிகளின் தலைமையில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை உடைக்க , பிரிக்க புதிய உலமா சபை என்று கூறி உருவாக்கப் பட்ட எல்லாம் எங்கே என்று கூட யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது .இவை எதார்த்தமாக இருக்க சில தமிழ் புலி சார்ப்பு ஊடங்கள் இதை வைத்து தமது அணிக்கு முஸ்லிம்களையும் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயலபட்டு வருகிறது .
அவற்றின் மற்றுமொரு பரப்புரையாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேறும் என்ற அறிவிப்பாகும் ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்படியான அறிவிப்புகள் எதனையும் இன்று வரை வெளியிடவில்லை ஆனால் தீர்வு கிடைக்காவிட்டால் சட்ட நடவடிகைகளில் இறங்கும் என்று அறிவித்துள்ளது . முஸ்லிம் சமூகத்தை குழப்பி அதன் சமூக தலைமையை உடைந்து விட்டதாக காட்டி புலி ஆதரவு தமிழ் தேசியம் மற்றும் அது சார்பு ஊடகங்கள்  முஸ்லிம்களை சேர்ந்துகொள்ள முயன்று வருகிறது என்பது அவதானிக்கப்பட்ட வேண்டிய விடயமாகும்.  புலித் தமிழ் தேசியம் 500 க்கும் அதிகமான மஸ்ஜிதுக்களை பாலாக்கி வரலாற்றை கொண்டது என்பது குறிப்பிடதத்க்கது .அவற்றில் ஒன்ரைகூட மீள் நிர்மாணிக்க புலி தமிழ் தேசியவாதிகள் இன்று வரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
அவர்கள் மட்டுமல்ல    முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை உடைக்க பெளத்த பேரினவாத தீவிரவாதகளும் முயற்சிகளை செய்வார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
அவர்கள் மட்டுமல்ல    முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை உடைக்க பெளத்த பேரினவாத தீவிரவாதகளும் முயற்சிகளை செய்வார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை
LM

No comments:

Post a Comment