மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் மட்டம் அதிகரித்த காரணத்தினால் இம்முடிவை பொறியியலாளர்கள் எடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரிப்பதன் காரணமாக மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் எரந்தன கேமவர்தன விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment