கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையிலான அதிவேக ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட சேவை நடத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ. ஆர். ரத்னாயக்க கூறினார்.
கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையிலான ரயில் பாதை மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டது.
மாத்தறையில் இருந்து காலி வரையும் முதலாம் கட்டத்தின் கீழும் காலியில் இருந்து அளுத்கம வரையும் இரண்டாம் கட்டமாகவும் அளுத்கமையில் இருந்து களுத்துறை மூன்றாவது கட்டமாகவும் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டது.
அளுத்கமைக்கும் - களுத்துறைக்குமிடை யிலான பணிகள் பெருமளவு நிறை வடைந்துள்ள நிலையில் மக்களின் நலன் கருதி விசேட கரையோர ரயில் சேவை நாளை இடம் பெறுகிறது. 19 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நேர அட்டவணைப்படி ரயில் சேவை இடம் பெறும் என ரத்நாயக்க கூறினார்.
No comments:
Post a Comment