Sunday, May 13, 2012

ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்



அஸ்ரப் ஏ ஸமத்: நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு  3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கிலபாடத்தை பட்டமாக கற்றவர்கள் இல்லை ஆகவேதான் அடுத்த அமைச்சரவையின் கூட்டத்தின்போது ஆங்கில மொழி முலமாவது பயின்ற பட்டதாரிகளை ஆங்கிலம் கற்பிப்பதற்குச் சேர்த்துக் கொள்வதற்காக மீள விண்ணப்பம் கோரப்படுவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும. என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
முன்னால் சபாநாயகர் பாக்கீர் மாக்காரினால் நிறுவப்பட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் ஸ்தாபகர் தினம் நேற்று (11) கொழும்பு பிரதான தபால் நிலைய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக் கூட்த்தின்போது முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம் இம்தியாஸ, முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், பேராசிரியர் கே.எம் தர்மதாச ஆகியோரும் உரையாற்றினர்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  இக் கூட்டத்தின்போது மாளிகாவத்தை பிரதேசத்தில் அப்பிள் தோட்டத்தில் வாழும் 200 குடும்பங்களில் முதல்தடவையாக க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு 2மாணவர்கள் தெரிபு செய்யப்பட்டுள்ளனர் அவாகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றையும் அமைச்சர் பந்துல குணவர்த்த முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சார்பில் வழங்கி வைத்தார்.
Thank: LankaMuslim

No comments:

Post a Comment