Thursday, May 31, 2012

முஸ்லிம்களை மதமாற்றுவதற்கு பல்வேறு இடங்களிலும் முஸ்தீபுகள்



எமது சமூகத்தில் காணப்படும் வறுமை மற்றும் அறியாமை தன்மைகளை பயன்படுத்தி இஸ்லாமியர்களை வேறு மதங்களுக்கு மாற்றும் சூழல் அண்மைக்காலமாக ஏற்பட்டுவருவதாக தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், அல்குர்ஆனினை கற்றுக் கொண்ட உலமாக்கள் இது குறித்து விழிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது என்றும் கூறினார்.
குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மெதகெட்டிய புர்கானிய்யா அரபு கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கலாசாலை முன்றலில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
கல்லூரியின் ஆயுட்கால தலைவரும், வடமாகாண கால்நடை, விவசாய, நீர்ப்பாசன, காணி அமைச்சின் செயலாளருமான யு.எல்.எம்.ஹாலிதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியாதாவது,
இன்று எமது முஸ்லிம்களுக்கு எதிராக சர்வதேசத்தில் பல்வேறு சதிகள் இடம் பெறுகின்றன. அவற்றை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு சில சக்திகள் செயற்படுவதை யாவரும் நன்கறிவர். இலங்கையில் இஸ்லாமிய பிரசாரப்பபணிகளை முஸ்லிம்களுக்கு செய்வதற்கு வருகைத் தந்த தப்லீக் ஜமாத் சகோதரர்களை ஆயுத பயிற்சியளிக்க வருபவர்களாக சித்தரித்து அதற்கு தடைகளை ஏற்படுத்தப்பட்டன. இது குறித்து நாம் உரிய தரப்புடன் பேசி உண்மையை விளக்கப்படுத்தினோம். இந்த பிழையான தகவல்களை வழங்கியவர்கள் யாரென்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த நாட்டில் 30 வருடம் காணப்பட்ட பயங்கர செயற்பாடுகளால் எமது முஸ்லிம்கள் இழந்ததது ஏராளம். பள்ளிவாசலுக்குள் சுஜூதுகளில் இருந்த போது சகோதர முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கில் வாழந்த முஸ்லிம்கள் துடைத்தெறியப்பட்டனர். இதெல்லாம் முஸ்லிம்களுக்கெதிரான சக்திகளின் செயற்பாடாகத் தான் இருக்கின்றது.
இஸ்லாத்தின் நிழலில் எமது சமூகத்தினை வழிகாட்ட வெண்டிய பொறுப்பு உலமாக்களுக்கு . இருக்கின்றது. இன்று அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவின் தலைமைத்துவம், சமூக ஒற்றுமையை முன்னெடுப்பதில் அளப்பறிய பணியாற்றுகின்றது. அரசியல் தலைவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போது, அவற்றை ஒற்றுமைப்படுத்துவதிலும் இவ்வமைப்பு செயற்பட்டுவருகின்றது. இன்றைய யதார்த்த சூழலை புரிந்த கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது.
எமது பணிகள் எல்லாம் மறுமை வாழ்வை நோக்கியதாக இருக்க வேண்டும், எமக்கிடையில் காணப்படும் மனக்கிலேசங்கள் அகற்றப்பட்டு இப்பிரதேசம் சன்மார்க்க மனம் வீசும் பிரதேசமாக மாற்றப்பட்டுவருகின்றமை பாராட்டுக்குரியது. 20 பேர் ஒன்றினைந்து உருவாக்கிய இந்த அரபு கலாசாலை இன்று பல குர்ஆனிய இதயங்களை உருவாக்கியுள்ளது. இவ்வாறான நல்ல பணிகளுக்கு எமது சொத்துக்களை வாரி வழங்குவதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், அக்குறனை ஜாமியா ரஹ்மானிய்யாவின் முன்னால் அதிபர் ஏ,கே.எம்.ஜிப்ரி ஹழரத் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
புர்கானிய்யா அரபுக் கல்லூரியின் சிறப்பு மலரொன்றும் வெளியிடடு வைக்கப்பட்டது.
Navamani

No comments:

Post a Comment