Tuesday, May 29, 2012

பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால்



முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து அரசிடமிருந்து இன்னும் உறுதியான எந்தவொரு அறிக்கையும் கிடைக்கவில்லை.
என்று தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் என்று தெரிய வந்ததும் அனைவரும் ஆர்பாட்டத்தை நடத்தினர் .அத்துடன் அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டனர்.ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று எனக் தொடர்ந்து கொண்டே செல்கிறது .பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இனியும் தொடரக் கூடாது இதற்கு அரசு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் .அரசு அவ்வாறு செய்யாவிட்டால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் .
இவை மார்க்கம் சமந்த பட்ட விடயம் எனவே எம்மால் மௌனமாக இருக்க முடியாது ,அரசியலுக்காக மார்க்கத்தை விட்டுகொடுக்க முடியாது . பள்ளிவாசல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவது பாரதூரமான விடயமாகும் அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப் படவேண்டும் என்றும் ஹசன் அலி தெரிவித்தார்.
LankaMuslim

No comments:

Post a Comment