Friday, May 04, 2012

இலங்கையில் அல்கைதா ? ‘மவ்பிம’ பத்திரிகை



அப்துல்லாஹ்-LamkaMuslim
கடந்த வாரம் (29.04.2012) வெளிவந்த ‘மவ்பிம’ எனப்படும் இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிகையில் அல்கைதா எனப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மேற்படி பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செதியாகவும் இது அமைந்திருந்தமை நிலைமையின் பாரதூரத்தைக் காட்டுகிறது.
அந்த தலைப்பு அமெரிக்கா இலங்கைக்கு அபாய அறிவிப்புச் செகிறது. அல்கைதா வரும் ஆயத்தமென்று” என்பதாக அமைந்திருந்தது. அதன் கீழ் அமைந்த தகவல்கள் வருமாறு,
தீவிரவாத மற்றும் கடும் அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் அல்கைதா மற்றும் தலிபான் அமைப்புக்கள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இலங்கை மண்ணை உபயோகிக்குமா என்பது பற்றி அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், அமெரிக்கா இது பற்றி உத்தியோகபூர்வமாக இலங்கையின் பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், இலங்கையில் அந்த பயங்கரவாத அமைப்பு இயங்குமாயின் அதன் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தேவையான பாதுகாப்புக் கருவிகளைக் கூட இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா இதுவரைக்கும் சில பாதுகாப்புக் கருவிகளை வழங்கியிருப்பதாக அறிய முடிகிறது.
இது பற்றி இலங்கை அரசுடன் பேசுவதற்கு எதிர்வரும் சில நாட்களுக்குள் அல்கைதா, தலிபான் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் விஷேட பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்று இலங்கைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்புக்கள் பற்றி ஆய்வு செவதற்காக இலங்கைக்கு மட்டுமன்றி இந்திய அரசுக்கும் இது போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது”என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செதி பயங்கரமானதாகும். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையும் அமெரிக்காவும் கீரியும் பாம்புமாக செயல்பட்டமையை எவரும் மறந்துவிடவில்லை. உலகிலுள்ள நாடுகளில் இலங்கையின் முதல்தர எதிரியாக அமெரிக்கா பார்க்கப்பட்டு வருவதுடன் ஜெனீவா மாநாட்டின் போது அரசாங்கத்தின் அமைச்சர்களில் பலரும் பொதுமக்களில் பலரும் அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் முழங்கிய கோஷங்களும் உலகையே அதிர வைத்தன.
ஆனால், ‘மவ்பிம’ பத்திரிகையின் செய்தியைப் பார்க்கும் போது அமெரிக்காவின் நலனுக்காக இலங்கை, அமெரிக்காவுக்கு உதவி செய்ய முன் வந்திருப்பதாக உணர முடிகிறது. இலங்கையில் அல்கைதாவின் வாசமே இல்லை. அப்படியான ஒரு குழுவின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை. இலங்கை முஸ்லிம்கள் சாத்வீக, ஜனநாயக அணுகு முறைகளில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் ஆயுதம் தூக்க நினைத்திருந்தால் புலிப் பிரச்சினை இருந்த போது அதனைச் செதிருக்க வேண்டும்.
ஆனால், இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் தூக்காத ஒரேயொரு இனமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இது இப்படியிருக்க முஸ்லிம்களை அல்கைதாவுடன் சம்பந்தப்படுத்தி இந்த பூச்சாண்டி காட்டும் முயற்சி தம்புள்ளை சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்படுவதில் தெளிவான உள்நோக்கம் இருக்கிறது.
தமிழர்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க முயற்சிக்கிறார்கள் என இது போன்ற செதிகள் ஊடாக இந்த நாட்டு ஊடகங்கள் கூற முயற்சிக்கின்றன. இந்த செய்தி உண்மையா என கண்டறிவதும் அது பற்றி ஆய்வு செய்வதும் பிழையான தகவல்களை பரப்புபவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதும் அரசினதும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளதும் உலமாக்களதும் கடமையாகும்.
இது போன்ற கருத்தை சம்பிக்க ரணவக்க என்பவர் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அல் ஜிஹாத்-அல்கைதா’ எனப்படும் தனது நூலில் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். புலிகளுக்கும் அல்கைதாவுக்கும் தொடர்பிருந்ததாகவும் புலிகளுக்கும் அல்கைதாவினர்தான் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் கிழக்கில் அல்கைதாவினால் பயிற்றப்பட்ட பல முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாகவும் அவர் ஓர் அபாண்டத்தை சுமத்தியிருந்தார்.
எனவே, இது போன்ற விஷமப் பிரசாரங்களை தடுத்து நிறுத்தும்படியும் உண்மையைக் கண்டறியும் படியும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இதே பத்திரிகையின் வேறு ஒரு கட்டுரையில் ‘1915 சம்பவம் மீண்டும் ஏற்படாதிருக்க வேண்டுமாயின்’ என்ற தலைப்பில் வேறு ஓர் ஆக்கம் ‘சந்தராணி பிரியலங்கா சுதுசிங்ஹ’ என்பவரால் எழுதப்பட்டுள்ளது. கம்பளையில் இருந்த 300 வருடப் பழமையான பலஹகொட தேவாலயத்தில் வருடாந்தம் கம்பளை நகரமெங்கும் மணியொலிக்கச் செய்து பெரஹெரா இடம்பெற்றது.
ஆனால், 1907இல் கரையோரங்களிலிருந்து கம்பளை வந்த முஸ்லிம்கள் அங்கு பள்ளியொன்றை நிறுவி அங்கு தமது வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்ததுடன் பள்ளியிலிருந்து 100 யார் சுற்று எல்லையை தூண்களால் வரையறுத்து அந்த எல்லைக்குள் பெரஹரா போகும் போது சப்தமின்றி நடனம், பாடல் இன்றிப் போக வேண்டும் என்று கூறினர்.
இதனை பொருட்படுத்தாது பெரஹர சென்றது என்று தொடரும் அந்த ஆக்கம் அக்காலத்தின் பிரித்தானிய நிருவாக அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் பற்றிப் பேசும் அதேவேளை, இறுதியில் 1905இல் எந்தவொரு வணக்கஸ்தலங்களுக்கு முன்னால் பெரஹரா சென்றாலும் அமைதியாகச் செல்ல வேண்டுமென்று பிரித்தானிய நிருவாகம் கட்டளையிட்டதாகவும், 1915 இல் வெளியிட்ட மற்றுமொரு அறிக்கையில் முஸ்லிம் பள்ளிக்கு முன்னால் பெரஹரா போகும் போது மேளதாளம் இசைக்க முடியாது என்று சிவப்பு மையால் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆங்கில அரசு முஸ்லிம்களை அரவணைத்து பௌத்தர்களது மத உரிமையை மதிக்காது நடந்திருப்பது போன்ற உணர்வை இந்த ஆக்கம் தருவதுடன், முழுத் தவறும் முஸ்லிம்களைச் சாரும் என்றும் கூற விளைகிறது.
1915ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி கடையொன்றின் மேல் மாடியிலிருந்து ஒரு முஸ்லிம் வியாபாரி சிங்கள பிள்ளையொன்றைச் சுட்டதில் அப்பிள்ளை மரணமடைந்ததாகவும் அதற்கு பொலிஸார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் அதனால் 83 பேர் கொலை செயப்படுமளவுக்கு வீடுகள், கட்டடங்கள் பல உடைக்கப்படுமளவுக்கு நாடு தழுவிய கலவரம் மூண்டது என்றும், 8408 பேர் விசாரணை செயப்பட்டு அதில் 4835 பேர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆக்கத்தின் எழுத்தாளர் இந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பௌத்தர்கள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்…
குருணாகலை நீதிமன்றில் 3649 என்ற இலக்க வழக்கை விசாரித்த ‘வூட் ஹவுஸ்’ எனும் நீதிபதி சிங்கள பௌத்தர்கள் இந்த கலவரத்தின் போது ஒருபொழுதும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. நாட்டுக்கு வெளியிலிருந்து வந்து குடியேறிய முஸ்லிம்கள்தான் இத்தகைய மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தனர்” என்று தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தம்புள்ளையில் காலா காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களால் பிரச்சினையில்லை என்றும் வெளியிலிருந்து வியாபார நோக்காக அங்கு வந்து பள்ளி கட்டியவர்களால்தான் இப்பிரச்சினை உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றை எடுத்துநோக்கும் போது பௌத்தர்கள் தவறுகளே செயாத புனிதர்களாக இருந்து வந்திருப்பதாகவும் முஸ்லிம்கள்தான் சகல சிக்கல்களையும் உருவாக்குபவர்கள் என்றும் இந்த ஆக்கம் நிறுவ முனைகிறது.
இது போன்ற ஆக்கங்கள் சிங்கள பத்திரிகைகளில் வெளிவரும் போது இவற்றைப் படிக்கும் பௌத்தர்களது சிந்தனை ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவமைக்கப்படலாம். எல்லாக் குற்றங்களும் முஸ்லிம்களால்தான் உருவாக்கப்படுகின்றன என்று ‘மூளைச்சலவை’ செயப்படுவது ஒரு ஊடக மற்றும் சிந்தனா ரீதியான யுத்தத்தின் வடிவமாகும். ஆயுதங்களால் செயப்படும் யுத்தத்தை விட பேனாவினால் செயப்படும் யுத்தம் அதிக தாக்கம் மிக்கதாகும். முஸ்லிம்கள் இது போன்ற ஆக்கங்களையும் நூல்களையும் ஆவு செது வெளிக்கொணர்வதோடு தக்க பதிலடிகளைக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
நாம் ஆர்ப்பாட்டங்களிலும் வெறும் கோஷங்களிலும் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் சகல அச்சு, இலத்திரனியல் ஊடகங்களையும் பயன்படுத்தி படித்த வர்க்கத்தினரதும், எதிர்கால பரம்பரையினதும் மூளைகளை எமக்கெதிராகத் திருப்புவதில் குறியாக உள்ளனர். அது சப்தமில்லாமல், ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது. மெதுவாக நடக்கும் ஆனால், நிச்சயமாக நடந்து முடியும்” (குடூணிதீ ஆதணா குதணூஞு) என்பது போல் அதன் விளைவுகள் உரிய காலத்தில் வெளியாகலாம்.
அல்லாஹ்விடம் துஆ செவது எமது ஆயுதம் என்பதில் சந்தேகமில்லை. துஆவுடன் நிறுத்தாமல் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் யதார்த்த நிலையை பெரும்பான்மை மக்களுக்கு அறிவுபூர்வமாக, நிதானமாக, நளினமாக சகல ஊடகங்களையும் பயன்படுத்தி சுமுகமான சூழலில் எடுத்துக் கூற முயற்சிப்போமாக!- இது விடிவெள்ளி பத்திரிகையில்  வெளியான கட்டுரை 

No comments:

Post a Comment