Thursday, May 10, 2012

மாற்றலாகிறார் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார்!


யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி, இமெல்டா சுகுமார் ஜனாதிபதி செயலணியின் உத்தரவின் பெயரில் குறித்த செயலணியின் உயர் பதவியொன்றிற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மாவட்டச் செயலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள தொலைநகல் மூலம் இந்த அறிவித்தல் கிடைக்கப் பெற்றிருப்பதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த அருமைநாயகம் என்பவர் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிய இவர் யுத்தத்தின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்பட இவர் உழைத்திருந்தார்.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாவட்ட பெண்கள் பிரச்சினைகள் குறித்தும் இவர் தொடர்ந்து பாடுபட்டு வந்திருந்தார்.

No comments:

Post a Comment