வெளிநாட்டு குற்றவாளிகளையும், பயங்கரவாத சந்தேக நபர்களையும் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தும் ஏறத்தாழ 900 சந்தர்ப்பங்களை பிரான்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள் தடுத்துள்ளதாக பிரிட்டிஷ் ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் மத தீவிரவாதியான அபு கட்டாடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் “சர்ச்சைக்குரிய 39ஆவது சட்டத்தைப் பாவித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற நீதிபதிகள் இத்திட்டத்தை இடைநிறுத்தினர்.
இச்சட்டத்தை பாவித்து சோமாலிய குற்றவாளிகளும் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழரும் பிரிட்டனில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான கருத் ஜோன்சன் உரை நிகழ்த்தும்போது பிரிட்டிஷ் நீதிமன்ற உத்தரவுகள் அமுல்படுத்துவதை உறுதி செய்யும் முகமாக பிரிட்டன் ஐரோப்பிய நீதிமன்றத்திலிருந்து வெளியேற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த ஐரோப்பிய நீதிமன்றத்தின் உறுப்பினர் பதவியை நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் ஜோன்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 39ஆவது சட்டமூலம் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மீது இடைக்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கு நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் காணப்படுகிறது.
நாடு கடத்தப்படுபவர் ஒருவருக்கு ஆபத்து ஏற்படுவது சாத்தியமானது என காணப்படும் பட்சத்தில் இவ் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றது. ஒருவரின் வழக்கு விசாரணை முடிவடையும் வரை நாடு கடத்தலை தடுப்பதற்கு இச்சட்டம் வழி வகுக்கிறது.
இந்த ஐரோப்பிய நீதிமன்றத்தை கண்காணிக்கும் 47 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கவுன்சில் நாடுகளிலேயே நாடு கடத்தலுக்கு எதிரான அதிக விண்ணப்பங்ள் கோரப்படுகின்றன.
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தலை தடுப்பதற்கான அதிக விண்ணப்பங்கள் கோரப்படும் அதேவேளையில் அதிக நாடு கடத்தல் சம்பவங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
2008 – 2011 காலப் பகுதியில் 39வது சட்டத் தின் கீழ் 12140 விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ள. இவற்றுள் பிட்டனிலிருந்து 4454 கோக்கைகள் கிடைத்துள்ளன.
இவற்றுள் 911 கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. சுவீடனிலிருந்து 691 கோரிக்கைகளும் பிரான்ஸிலிருந்து 432 கோரிக்கைகளும் கிடைத்தன.
எனினும் பிரிட்டனிலிருந்து கிடைக்கப் பெற்ற 2809 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 734 கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமென தெரிகிறது.
தனிப்பட்ட நபர்கள் தங்களை நாடு கடத்தும் திட்டத்தை முறியடிப்பதற்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாடுவர் எனவும் தங்களைப் பாதிக்கும் பிரிட்டிஷ் நீதிமன்ற முடிவை எதிர்ப்பரெனவும் பிரிட்டிஷ் முகவர் நிறுவனத்திற்கு தெரியுமென குடியேற்ற அமைச்சர் டயமண் கிரீன் தெரிவிக்கிறார்.
Tamilcnn
No comments:
Post a Comment