Monday, June 11, 2012

சங்கிலியால் கட்டப்பட்டுள்ள குவாண்டனாமோ கைதிகள்


மிக கொடிய குற்றங்களை புரிந்தவர்கள் அனைவரும் குவாண்டனாமோ சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், இச்சிறைச்சாலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதற்குள் முதன் முதலாக பிரிட்டிஷ் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஆபத்தான சிறைக் கைதிகளின் அன்றாட வாழ்வைப் படம்பிடித்தனர், அவர்களுடன் பேசி அன்றாட வாழ்வைப் பற்றிய தகவல்களை கேட்டு அறிந்தனர்.
இச்சிறையில் வெடிகுண்டு தயாரிப்பவர்கள், தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டித் தருபவர்கள், அமெரிக்கா மற்றும் படைவீரர்களைக் கொலை செய்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது, இதன் பின் இந்த சிறைச்சாலையை மூடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
LS

No comments:

Post a Comment