Tuesday, June 19, 2012

தமிழ் ஊடக வலையில் முஸ்லிம்கள்?!


 லங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஊடக செய்திகள் பல அச்சங்களை கிளப்பி வருகின்றன. முஸ்லிம்களை பற்றி தவறான கற்பிதங்களை உருவகப்படுத்திய சிங்கள ஊடகங்கள் பல இன்று முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கே ஒவ்வாதவர்கள் என்ற கோணத்தில் எழுத முற்பட்டுள்ளன. அச்சு ஊடகங்களை விடவும் வலைத்தளங்களிலேயே இந்த கட்டுப்பாடற்ற செய்திகள் வெளியாகின்றன. இவை நல்ல சிங்கள மக்ககள் மனதிலும் முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்களை உருவாக்கவும், விரும்பத்தகாத முடிவுகளை நோக்கி அவர்களை இட்டு செல்லவும் வலிதுடையவை.


முஸ்லிம்களால் நடாத்தப்படும் ஊடகங்களும் தங்கள் திறமையையும், தரத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன. நரம்புகளை சூடாக்கும் கனமான வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்துவதன் மூலம் இவை முஸ்லிம்களின் எதிர்கால வாழ்வின் இருப்புக்களுடன் விளையாடுகின்றன. ஒரு செய்தியை அவசரமாக விவரிப்பதும். பின்னர் ஓரிரு நாட்களில் அதற்கு முரணான செய்தியை அதே பாணியில் வெளியிடுவதுமென இவர்களது கோமாளித்தனங்கள் ஏராளம். 

சிங்கள, முஸ்லிம் ஊடகங்களிற்கு அப்பால் தமிழர் தரப்பினரால் நடாத்தப்படும் ஊடகங்கள் இன்னொரு வழியில் தொழிற்படுகின்றன. முஸ்லிம் விரோத, குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் முஸ்லிம்கள் மீது சேறு பூசும் ஊடகங்களாக செயற்பட்ட பல தமிழ் ஊடகங்கள் இப்போது இலங்கை முஸ்லிம்களை பேரினவாதம் தாக்கும். அழிக்கும். பொருளாதார நிலைகளை நிர்வாணப்படுத்தும் என எச்சரிக்கின்றன. பர்மா என்கின்றன சில. மியன்மார் என்கின்றன பல. பௌத்தம், இராணுவம், இனவாதம் போன்ற சொற்சிலம்பங்கள் ஊடாக முஸ்லிம்கள் உள்ளங்களில் ஒரு வகை பீதி நிலையை உருவாக்க முனைகின்றன இவை.

குஜாரத் கலவரத்தை நினைவுபடுத்தி பல கட்டுரைகள் இன்று இவர்களால் எழுதப்படுகின்றன. அன்று குஜாரத் கலவரங்கள் நிகழ்த்தப்பட்ட போது மௌனித்த இவை இன்று குஜாரத் வன்முறைகள் பற்றி பேசுகின்றன. மியன்மாரின் பௌத்த இராணுவ ஒடுக்கு முறைகள் பற்றி எழுதுகின்றன.

வடக்கு கிழக்கின் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் இவை எதை நோக்கிய பாதையில் முஸ்லிம்களை இழுக்க முனைகின்றன. முஸ்லிம் மற்றும் தமிழர்கள் இணைந்த போராட்ட செல்நெறிகள் பற்றிய பாதை பற்றியே இவை மெல்ல காய் நகர்த்துகின்றன. முஸ்லிம்களை போராட தூண்டுவதன் மூலம் தடுமாறும் தமிழீழ தோணைியை சீர்செய்ய பார்க்கின்றனவா இவை?
முஸ்லிம் இளைஞர்களை முன்னிறுத்திய போராட்ட களத்தின் வாயில்களை திறந்து விட இதனை வாய்ப்பாக பயன்படுத்தும் ஒரு பிரமாண்ட சதி வலையின் ஓர் அங்கமாகவே இவை பெரிதும் புலப்படுவதாக எண்ண தோன்றுகிறது.

இவ்வாறான மாயச்சூழ்நிலைகளில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறவோ அல்லது தவறான பாதைகளை நோக்கி பயணிக்கவோ கூடாது. இலங்கை ஆட்சியாளர்களிற்கு எதிரான போராட்ட ஒழுங்குகள் என்பது தவறானது. குருட்டுத்தனமானது. இந்த தூண்டில்களில் சிக்காமல் இலங்கை முஸ்லிம் சமூகம் வழிநடாத்தப்படல் அவசியம். 


மேற்குலகம், தெற்காசியாவில் உருவாக்க முயலும் கிறிஸ்தவ தேச முனைப்புக்ளின் வெளிப்பாடுகள் பற்பல. அவற்றில் ஒன்றே இந்த முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள். முஸ்லிம்கள் அவதானமாகவும், விழிப்புடனும் செயற்படும் காலங்கள் இவை..
Thanks : Facebook Link-

No comments:

Post a Comment