Friday, June 08, 2012

தெஹிவளை முஸ்லிம்களை வெளியேற்ற முயற்சி தகவலுக்கு தெஹிவளை மேயர் மறுப்பு



தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் தனசிறி அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெஹிவளையில் வாழும் 23000 முஸ்லிம்களை வெளியேற்ற அரசாங்கத்தின் கடும்போக்குடைய சக்திகள் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்ததாக The Island வெளியிட்ட செய்தியை பிழையான தகவல் என்றும் இது முஸ்லிம்களுக்கும் , சிங்களவர்களுக்கும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் கருத்து என்று தெரிவித்துள்ளார் .
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மத வழிபாட்டுத் தளங்கள் மீது ஆளும் கட்சியின் கடும் போக்குடைய தரப்பினர் அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதாகவும் .தெஹிவளையில் பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் எனினும், அரசாங்கத்தின் சில தரப்பினர் முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சுமத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் தனசிறி அமரதுங்க.  தெரிவித்துள்ள தகவலில் உண்மையில் சில வாரங்களுக்கு முன்னர் சிலர்  சட்ட விரோதமாக மாடுகளை அறுக்கும் இடம் ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இது தொடர்பாக எனக்கு அறிவிக்கப்பட்டது அது தொடர்பில் நான் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தேன். போலீசார் குறித்த இடத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்கி பெரிய அசம்பாவிதங்கள் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த குறித்த இடத்தில் மாடுகளை அறுக்கும் இடம் இல்லை என்பது தெரியவந்தது.
பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மாநாடு மண்டபத்தில் இதனுடன் தொடர்பான தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளரின் சார்பில் கலந்துகொண்ட சிரேஷ்ட DIG அனுர செனநாயகா -எவரும் சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்ளவோ, எந்த மத வழிபாட்டு தலங்களையும் தாக்கி இன அமைதியின்மையை ஏற்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார். அந்த கூட்டத்தில் குறித்த பள்ளி நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது என்றும் தீர்மானிக்கப் பட்டது .
இன்று வரையும் அங்கு பூரண அமைதியும், இன சமாதானமும் நிலவுகிறது. வெளியான செய்தியின் தன்மை ஆபத்தானதும் சமூகங்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியதும் என்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார் 

No comments:

Post a Comment