தமிழர் விடுதலை போராட்டம் நல்லூர் தேர் போன்றது. ஆரம்பித்த இடத்திலேயே சுற்றி வந்து மீண்டும் நிற்கிறது. புலிப்பயங்கரவாதம் கடந்த இரு தசாப்தங்களில் விடுதலை என்ற பெயரில் பெற்றுக் கொடுத்தது மயானங்களையும், இடிந்த கட்டடங்களையுமே. அதில் எஞ்சியிருப்பவர் விதைவகளும், அநாதைகளும், பார்பாரற்ற முதியோர்களுமே.
புலிகளினால் கட்டாயமாக கடத்தி (Political Hijack) வைக்கப்பட்டிருந்த தமிழர் அரசியல் இப்போது சுயாதீன செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. திறந்த தமிழர் அரசியல் போராட்டம் என்பது இன்று பல வெளிநாட்டு சக்திகளாலும், உளவு நிறுவனங்களாலும் வழி நடாத்தப்படுகின்றன. எப்படி தமிழர் போராட்டத்தை இந்திரா காந்தி ஹைஜேர்க் பண்ணினாரோ அது போல.
கிழக்கு திமோர் பாணி, தென் சூடான் பாணி, ஏன் இஸ்ரேல் பாணி பற்றியெல்லாம் தமிழர் தரப்பு எழுதுகிறது. பேசுகிறது. சிலாகிக்கிறது. எப்படியாவது தனித்தமிழீழத்தை அடைந்தே தீருவது எனும் மையப்புள்ளியிலேயே இந்த அனைத்து செயற்பாடுகளும் இறுதியில் ஒன்று குவிக்கப்படுகின்றன.
இவர்கள் கவனமாக “தமிழீழம்” என்ற சொற்பதத்திற்கு பதிலாக “தமிழர் தாயகம்” எனும் வார்த்தையை உபயோகிக்கின்றனர். இழக்கப்படும் தமிழர் தாயக நிலங்கள் என்ற கோஷங்கள் பல முனைகளிலும் முன்வைக்கப்படுகின்றன.
இது அவர்கள் பிரச்சனை. ஆனால் அவர்கள் அதில் கவனமாக செயற்பகின்றனர். தங்கள் இலக்கினை அடைய அவர்கள் கையில் எடுத்துள்ள புதிய வியூகம் தான் “இலங்கை முஸ்லிம்களை தேசிய அரசியலில் இருந்து நம்பிக்கை இழக்க வைத்தல்”.
இந்த யுக்தி இப்போது நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. கிழக்கில் தமிழர் அரசியல் தரப்பினருடன் இணைந்து அரசியல் முன்னெடுப்புக்களை செய்ய முஸ்லிம் காங்கிரஸ் முன்வரும் அளவிற்கு அவர்கள் காய் நகர்த்தியுள்ளனர். பல முஸ்லிம்களும் இன்று அரச அதிருப்தியாளர்களாக மாற இவர்கள் ஒரு முக்கிய காரணம்.
பேரினவாத செயற்பாடுகள் என்பதனை மட்டும் வைத்து பார்த்தால் இவர்களுடன் இணைவது மேல்வாரியாக சரியாகவே தோன்றும். ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனங்கள், அதிருப்திகள் உருவாவதற்கான வாய்ப்பாகவே இதனை தமிழர் தரப்பினர் பயன்படுத்துகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஸ அவர்களின் அரசினை வீழ்த்துவனை குறியாக கொண்டு இயங்கும் சர்வதேச கும்பல்கள், தங்கள் அரசியல் முயற்சிகளிற்கு இவர்களை வைத்தே பல அரசியல் ரீதியான காரியங்கள் ஆற்ற முற்பட்டுள்ளைமையை நாம் காண்கிறோம். இந்த சதி வலையில் முஸ்லிம்கள் வீழ்ந்துவிடக் கூடாது.
நியாயமான தமிழர்களின் நியாயமான பிரச்சனைகளை அதே நியாயத்தின் அடிப்படையி்ல் நாம் மதிப்பதென்பது வேறு. அவர்களின் பிரச்சனையை உள்வாங்கி நாம் தேசிய அரசியலில் இருந்து விலக முற்படுவது என்பது வேறு. முஸ்லிம்கள் கவனமாக விழிப்புடன் செயற்பட வேண்டிய காலம் இது.
தமிழ் ஊடகங்கள் வழங்கும் உற்சாக போதையில் முஸ்லிம் ஊடகங்களும் அவர்கள் வழியில் செல்ல முற்பட்டுள்ளமை கவலை தரும் விடயமாக மாறியுள்ளது. அரசை விமர்சிப்பதனால் முஸ்லிம்கள் அடையப்போவது எதுவிமில்லை. தமிழ் ஊடகங்கள் தரும் வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை நாம் அறிவு ரீதியாகவே அனுக வேண்டும. உணற்ச்சிபூர்வமாக அல்ல.
நாம் இரண்டு தளங்களை கொண்டவர்கள். தெற்கிலங்கையில் ஒரு தளத்தை நிறுவிய நிலையிலேயே வட இலங்கையின் இருத்தலிற்கான வழிவகைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த இரண்டுமே குழப்பப்படாத அரசியல் வேலைத்திட்டமே எமக்கு தேவை.
தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு எனும் விடயத்தை தமிழர் ஊடக மற்றும் அரசியல் தரப்பினர் அழுத்தமாக முன்வைக்கின்றனர். எம்மை உள்வாங்க, போராட்டகாரர்களாக மாற்ற முற்படுகின்றனர். இதன் பின்னே ஒரு பொறியுள்ளது. அது சர்வதேசம் சொல்லித்தந்த பொறி. நாம் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய நாட்கள் இவை. .
அனைத்து தமிழ் சக்திகளும், அதில் நல்ல சக்தி, புலி ஆதரவு சக்தி போன்ற எல்லாமே எம்மை அவர்களுடைய தனித்துவ அரசியலினுள் அரசியல் செய்யும் வலையமைப்பையே நிறுவ முற்பட்டுள்ளன. செல்வநாயகம் சொன்ன கருத்துக்களை இன்று நாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுகொள்ள வேண்டும் என நினைக்கும் அளவிற்கு தமிழ் குறுந்தேசியவாதம் எழுந்து நிற்கிறது.
அது தனது இலக்குகளை அடையும் போது முஸ்லிம்களை என்ன செய்யும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்கள் இவ்வளவு காலமும் செய்த அரசியலை விடவும் வலுவாகவும் முனைப்பாகவும் அரசியல் களம் இறங்கியுள்ளனர். இவர்களது யாழ்ப்பாணத்து அரசியல் ஆட்டத்தில் பந்துகளாக எம் சமூகம் உருட்டப்படப்போகிறது.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களிற்கு மட்டும் தந்தையாக இருக்கட்டும். தமிழ் செல்வன் சித்தப்பாவாக இருக்கட்டும். அது அவர்கள் அரசியல். இஸ்லாத்தின் அரசியல் வழிகாட்டல்களின்படியும், சஹாபாக்கள் அதனை விளங்கி எடுத்த முறையும் போதும் எம் அரசியல் இருப்புக்களை பேணிக்கொள்ள...
No comments:
Post a Comment