Wednesday, June 27, 2012

உமர் முத்தார் பாதையும் எம் முஸ்லிம் சமுதாயமும்



லகில் சமூகங்களிற்கான இலக்கு ஒன்று தான். “சொகுசு நோக்கிய வாழ்க்கை”. தெளிவாக சொன்னால் கொன்போர்ட் லை(f)ப். லக்ஸேரியஸ் லை(f)ப். இந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக மனிதன் எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறான். வானத்தை விற்று வானவில் வாங்கும் முயற்சியில்.


சடவாதம். இன்றைய உலகின் பலமான சக்தி. முழு மனித இனமும் இதனால் கட்டுண்டு கிடக்கிறது. முஸ்லிம்கள் உட்பட. உலக சமூக ஒழுங்கும், பொருளாதாரமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலுமினாட்டிகளால் அதாவது ப்றீமேசனரி என அழைக்கப்படும் சாத்தானிய சக்திகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகமயமாக்கல் (Globalization), புதிய உலக ஒழுங்கு (New World Order), பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War against the terrorism) , மனித நேய தாக்குதல் (Humanitarian attacks) என பல வழிகளில் இவை உலகை கட்டுக்குள் வைத்துள்ளன. 

ந்திரியமும், இரைப்பையுமே வாழ்தலிற்கான இருப்பு என சிந்திக்கும் சடவாத மூளைகளிற்கு சொந்தக்காரர்களாக நாம் ஆக்கப்பட்டுள்ளோம். பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதில் இலங்கை முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. எல்லாவற்றையுமே சடவாத மெக்கானிஸத்தை அடிப்படையாகவைத்து நம்புவது, செயற்படுவது, சிந்திப்பது என நாம் இயங்குகின்றோம். “சில்லறை இருப்பவனை பார்த்து மட்டும் சிரி” எனும் இயங்கியல் விதியின்படியே நாம் இயங்குகின்றோம்.


விளடீமிர் இலியச் லெனின். கம்யூனிசத்தின் அப்பன். அவர் ஒரு முறை கூறினார்.. “மனித உறவுகளை தீர்மானிப்பது பணம்” என்று. வாஸ்தவமான வார்த்தைகள். முதலாளித்துவம் எதை எடுத்ததோ இல்லையோ இந்த கம்யூனிஸ தலைவரின் வார்த்தையை அடிப்படையாக வைத்தே உலகை இயக்கி வருகிறது. நாம் கூட இதை அடிப்படையாக வைத்தே இயங்குகிறோம். இயக்கப்படுகிறோம். இதனால் தான் நாம் நம் உறவுகளை, சமூகத்தை, மார்க்கத்தை, தேசத்தை எல்லாம் அடகுவைத்தாவது சொகுசாக வாழ முற்படுகின்றோம். சொல்லப்போனால் நாம் “பொருளாதார பிராணிகள்” என்றால் தவறாகாது.

ஆனால் அன்று எம் முன்னையவர்கள் இப்படி வாழவில்லை. எல்லா வேளையிலும் அல்லாஹ்வை சார்ந்திருந்தனர். தக்வாவும், தவக்கலும் அவர்களை வழி நடாத்தின. உறுதியான மனிதர்களாக, ஈமானிய வார்ப்புக்களாக அவர்கள் விளங்கினார்கள். காபிர்கள் அவர்களை கண்டு பயந்தார்கள். விரண்டோடினார்கள். இதோ அது பற்றிய ஒரு நிகழ்வு........

லிபியா. பழைய லிபியா. இத்தாலி ஆக்கிரமித்த லிபியா. முசோலினி தாகூத்தாக இருந்த லிபியா. ஜெனரல் கிரேஸியானியின் கட்டுப்பாட்டில் இருந்த லிபியா. அதன் துறைமுக நகர் பெங்காஸி. கேர்ணல் மார்க்கோனியின் அநியாயங்களிற்கு முகம் கொடுத்த நகரம். ஒரு நள்ளிரவில் உமர் முக்தார் அவர்களின் தலைமையில் தளபதி கரீமியினால் வழிநடாத்தப்பட்ட முஜாஹித்கள் இத்தாலியின் ஆயுத கிடங்கை முற்றாக கைப்பற்றி ஆயுதங்களை கொள்ளையடித்தனர். செல்லும் போது மிகுதி ஆயுதங்களை வெடிக்கவைத்து நாசம் செய்து சென்றனர். 


பாலைவனத்தின் மேற்கு மூளையில் இருந்த மலை குகைகளில் முஜாஹித்தகள் குதூகலிக்கிறார்கள். கையில் புதிய வகை சப்மெஷின் துப்பாக்கிகள். ஸ்டென் கன்கள். ட்ரம் மொடல் எல்.எம்.ஜிகள். நினைத்து பார்க்க முடியாத அளவு ஆயுதங்கள். 303 சொட்கன்களுடன் களமாடிய முஜாஹித்கள் இப்போது சப்மெஷின் கன்களுடன். நாளை பஜ்ர் பாங்கு ஒலிக்கும் போது கூடவே லிபியாவின் சுதந்திர பாடலும் ஒலிக்கும் என ஆர்ப்பரித்தனர். அவ்வளவு நம்பிக்கை அவர்களிற்கு. 


போராட்ட நாயகன் மிஸ்ஸிங். உமர் முக்தாரை காணவில்லை. ஆயுதங்கள் கிடைத்த மகிழ்ச்சிகரமான ஆடல் பாடல்களில் அவர் இல்லை. தேடிய கண்களுடன் தளபதி அல்கரீமி, தாக்குதல் தளபதி இஸ்மாயீலை அழைத்து கொண்டு அங்குமிங்கும் பார்க்கிறார். ஒரு குகையடிவார மூளையில் உமர் முக்தார். சூரா முஜாதலாவின் வசனங்களில் மூழ்கி போயிருக்கிறார். அல்கரீமீ வியப்புடன் கேட்டார்.. “யா ஷேய்ஹ்........... ஏன் நீங்கள் சந்தோஷமாக எங்களுடன் இருக்காமல் இப்படி தனியாக இருக்கிறீர்கள். இந்த ஆயுதங்களை கொண்டு சில நாட்களில் நாம் முழு லிபியாவையும் விடிவிப்போம்.”


உமர் முக்தார் மெல்ல புன்முறுவல் பூத்தவாறு சொன்னார் “யா அகீ.........இந்த ஆயுதங்கள் எமக்கு சொற்ப அளவே துணை நிற்கும். அல்லாஹ் நாடினாலன்றி”. அல்கரீமிக்கோ ஆச்சரியம். “எதற்காக சொல்கிறீர்கள் அப்படி. நாம் எம் முழு பலத்தையும் பிரயோகித்து 100 விகித அர்ப்பணங்களிற்கு மத்தியில் இதனை நாம் கைப்பற்றியுள்ளோமே” என்றார்.


ஆம் நாம் சிறு தவறு செய்திருந்தாலும் நாம் அனைவரும் அழிந்திருப்போம். அல்ஹம்துலில்லாஹ் நாம் எதிர்பார்த்ததை விடவும் சக்திமிக்க ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளோம். நான் மீண்டும் சொல்கிறேன் இந்த ஆயுதங்கள் சொற்ப அளவே துணை எமக்கு நிற்கும்”. 

ன்ன அற்புதமான வார்த்தைகள் அவை. ஈமானிய உறுதியின் உச்ச கட்ட வார்த்தைகள். ஆயுதங்களை கைப்பற்ற முழு இயக்கத்தையும், தலைமையையும் பணயம் வைத்து தாக்குதல் நடாத்தப்படுகிறது. சற்று பிசறினாலும் எல்லோரும் அவுட். ஆயுங்கள் மலை போல் கால்களின் கீழ். அதே வேளை இந்த ஆயதங்கள் பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது. அல்லாஹ் மீதே பரிபூரணமான தவக்கல்.

இந்த விடயம் லொஜிக்கலி கொன்ட்ரடிக்ஷ்ன் என்றே சடவாத உலகம் கற்று தரும். ஆனால் இதுதான் யாதர்த்தமான உண்மை. நவீன ஆயுதங்களின் தேவை விடுதலை போராட்டத்தில் இன்றியமையாதது. அதற்காக தலைமைத்துவம் வரை களமிறக்கப்பட்டது. அதன் பெயர் முயற்ச்சி. அதே வேளையில் ஆயுதங்கள் கைகளில் இருக்கிறதே என்று அல்லாஹ்வை மறக்கவில்லை. 100 விகித தவக்கல் அவன் மேல்.

இந்த மாதிரியான வரலாற்று மனிதரை நாம் கண்டதுண்டா? அமைப்புக்களை உருவாக்குகிறோம். இன்டர்நெட்டில் திட்டம் போடுகிறோம். புரொஜெக்ட் என்கிறோம். பிளேன் பண்ணுகிறோம். டிசைன் பண்ணுகிறோம். இன்னும் என்னவெல்லாமோ செய்கிறோம். அல்லாஹ்வின் திருப்தியை மறந்த நிலையில். உலக கல்வி, உலக ஒழுங்கு, உலக மாற்றம், உலக சாதனங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் எம்மை வழிநடாத்துகின்றன. அகிலிற்கு அடிபணிந்தவர்களாக நாம் மாறிவிட்டோம்.

இந்த நிலையிலேயே நாம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளிற்கும் தீர்வுகளை யோசிக்கின்றோம். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை பற்றி பேசுகின்றோம். யாழ்ப்பாண சோனக தெருவின் பிரச்சனைகளை விலாவாரியாக பேசுகின்றோம். உலக சிந்தனையுள்ள, சடவாத விலங்குகளாக நாம் இருந்து கொண்டு சமுதாய மாற்றம் பற்றியும், சமூக பாதுகாப்பு பற்றியும் கவலைகொள்கின்றோம். கனவு காண்கின்றோம்.

எல்லாமே தோற்று போகும். எதிரியின் வெற்றி தொடரும். எதுவரைக்கும் தெரியுமா? எம்மில் மாற்றம் வராத வரைக்கும். குர்ஆன் சுன்னாவின் வழியில் இறை திருப்தியையும், இறை கோபத்தையும் ஒவ்வொரு விடயங்களிலும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் மனிதர்களாக மாறும் வரை. எப்போது நாம் எமது பிரச்சனைகளிற்கு இஸ்லாத்தில் தீர்வுகளை காண விளைகின்றோமோ, அப்போது அந்த பிரச்சனைகளை தீர்க்கும் பொருப்பில் பங்காளியாக இறைவன் இருக்கின்றான்.

இல்லை மாற மாட்டோம். மகனை நெட்வேர்க் என்ஜினியரிங் படிக்க அனுப்பி, யூ.கே. ஸ்டுடன்ட் விசாவில் லண்டனிற்கு அனுப்பி, அவன் அனுப்பும் காசில் பெரியமுல்லையிலும், தெஹிவலையிலும் வீடுவாங்கி கூடவே சோனகதெருவிலும் ஒரு காணியை வாங்கி, மியாமியில் வலிமா கொடுத்து, அடுத்த மாதம் உம்றா சென்று திரும்பி வரும் வழியில் டுபாயில் தங்கம் வாங்கி, அதை கொண்டு வந்து செட்டி தெருவில் விற்று, அந்த காசில் மகளை சீமா படிக்க தனியாக கொள்ளுபிட்டிக்கு அனுப்பி, அங்கு அவள் கூட்டாளியுடன் ரெஸ்டரண்டில் கொக்கோ கோலா குடிப்பதுதான் வாழ்க்கை யென்றால் .... Very Sorry.

No comments:

Post a Comment