மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனசங்காரம் வகை தொகையின்றி நடைபெறுகிறது. முஸ்லிம்கள் உறைந்து போன இரத்த குழம்பில் பூட்ஸ் கால்களுடன் அலைகிறது பொளத்த இராணுவம். இவர்களின் இந்த துயரங்களுடன் தான் நாம் வரும் ரம்ழான் மாதத்தை எதிர்நோக்கவுள்ளோம்.
சகோதரர்களே, சகோதரிகளே இந்த ரமழான் இவர்களிற்கு சமர்ப்பணமாகட்டும். நாம் ரமழானில் செலவு செய்யவிருக்கும் பணத்தை சேமித்து இவர்களின் துயர்துடைக்கும் அனைத்து விடயங்களிற்கும் அனுப்பி வைப்போம். எம் உணவுகளை, உடைகளை சுருக்கி கொண்டு அந்த பணத்தை எமது சகோதர பர்மியர்களிற்காக பங்கிடுவோம். இது கைபர் தளத்தின் பகீரங்க வேண்டுகோள்.
பர்மிய முஸ்லிம் பச்சிளம் சிசுக்களை, குழந்தைகளை உயிருடன் தகடுகளின் மேல் போட்டு தீயவைத்து கொலை செய்து இன்பம் காண்கிறது பௌத்த மதவாதம். நாம் இதனை மறந்து டெவில் சிக்கன் உண்பதில் மட்டும் அக்கறை கொள்வோமானால் நாம் முஸ்லீம்களா? என்பதில் கேள்விகள் எழுகின்றன.
இன்றைய மியன்மார் களம் தான் நாளைய எமது களமாக மாறலாம். இனவாதமும் மதவாதமும் கைகோர்த்து எங்கள் கதவுகளை தட்டலாம். எங்கள் பெண்களை, குழந்தைகளை அவர்கள் எவ்வாறெல்லாம் அநியாயம் செய்வார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.
“மியன்மார் என்பது இறைவனின் ஒரு எச்சரிக்கை”. இது நமக்கு ஒரு பாடம். எம்மை நாம் அவசரமாக இஸ்லாத்தின் பக்கம் முழுமையாக இணைத்து கொள்வது ஒன்றே எமக்கு உள்ள ஒரே தெரிவு.
No comments:
Post a Comment