நேற்றைய தினம் சோனகதெருவின் இன்னொரு பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். நல்ல அரசியல் மனிதர்கள் கலகலப்பாக பேசினர். எப்படியோ காற்றாடி போட்டு வசதியாக தொழுவதற்கு, இபாதத் செய்வதற்கு இன்னொரு பள்ளிவாசல் கிடைத்து விட்டது என்று எண்ணாமல் அதனை அல்லாஹ்வும் அவர் நபியும் எவ்வாறு இயங்க வேண்டும் என விதித்துள்ளார்களோ அவ்வாறு இயங்க வைக்க நாம் முன்வரல் வேண்டும்.
இறைவனின் இல்லத்தை சீர்செய்வதும், அதை மீளவும் செயற்படவைப்பதும் மகத்தான பணியே. அதை அல்லாஹ்விற்காக மட்டும் அவன் திருப்திக்காக மட்டும் செய்வதிலேயே வெற்றியிருக்கிறது. இந்த பள்ளிவாசல் மீள்நிர்மாண விடயத்தில் எவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் இலக்காக கொண்டு செயற்பட்டார்களோ அவர்கள் நம்மில் மிகச்சிறந்தவர்கள் ஆவர். அந்தவகையில் அவ்வாறான மனிதர்களை நாம் பாராட்டியேயாக வேண்டும்.
யாழ்ப்பாண சோனகதெருவின் ஒரு பிரதான எல்லையை அண்டிய மஸ்ஜித்தாகவே சின்னபள்ளிவாசல் காணப்படுகிறது. இந்த பள்ளிவாசலின் சுறுசுறுப்பான செயற்பாடென்பது அந்த பிரதேசங்களில் மாற்று மதத்தினர் குடியிருப்புக்களை மேற்கொள்ளும் விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது எதிர்காலங்களில் நல்ல பலன்களை தரும் என நம்புகிறோம்.
சீமெந்து கட்டடங்களும், மின்விசிறிகளும், சேடெட் லைட்களும் ஒரு போதுமும் மஸ்ஜித்திற்கு உயிரோட்டத்தை கொண்டுவரப்போவதில்லை. இறைவனை அஞ்சி வணங்கும் மனிதர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாகாத வகையில் அதனை உபயோகிக்கும் போதே அந்த மஸ்ஜித் ரூஹானியத் நிறைந்த மஸ்ஜித்தாக உருப்பெரும். மனிதர்கள் மட்டுமன்றி சாலிஹான அல்லாஹ்வின் மலாயிகத்துமார்கள் போன்றவர்களும் அதில் தரித்திருப்பர்.
சின்னபள்ளிவாசலில் அல்குர்ஆன், அல்சுன்னாஹ் சொல்லும் விதிகளிற்கு அமைய எந்த ஜாஹிலியத்தான, பித்அத்தான, ஹராமான, ரித்தத்தான செயல்களும் இடம்பெறாமல் காப்பது எமது கடமை. ஸ்ரீ லங்கா வக்ப் வாரியம் சொல்லும் விதிகளிற்கு அமைவாக, அவர்களின் சட்டதிட்டங்களை மதித்து நாம் செயற்படல் வேண்டும். இதனால் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த மஸ்ஜித்தை இயங்க வைக்க முடியும்.
படித்தவன் பாமரன், பணக்காரன் ஏழை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் எனும் ஒரே சிந்தனையுடன் இந்த மஸ்ஜித்தை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த மஸ்ஜித்தினை நிர்மாணிக்க உதவி செய்த உள்நாட்டு, வெளிநாட்டு சகோதரர்கள் அனைவரிற்கும் அவர்கள் எண்ணங்களிற்கு ஏற்ப அல்லாஹ் கூலி கொடுப்பதில் பெரியவன்.
இந்த இடத்தில் இன்னொரு ஞாபகம் வருகிறது. இந்த பள்ளிவாயல் பற்றை மண்டி காடாக கிடந்த போது அதனை துப்பரவு செய்து தொழுகையை முன்னிறுத்திய சகோதரர் சுவைஸ் அவர்களை இந்த இடத்தில் மறக்க முடியாது. யாருமே இல்லா காலைகளில் இவர் மஸ்ஜித்தின் சேவகனாக மாறி நின்றார். அவர் பல தரம் இந்த பள்ளியை ஓரளவாவது திருத்த உதவுமாறு எம்மிடம் பல முறை கோரியுள்ளார். சில முயற்சிகளையும் செய்துள்ளார். அதே போல் இந்த பள்ளியில் மக்கள் தொழுகை நடாத்த வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கி அதற்காக உழைத்த மௌலவி பைசர் (காஸிமி - அல் மதனி) அவர்களையும் நினைவுகூர்வது காலத்தின் தேவை என உணர்கிறோம்.
எமக்கு தெரியாத பல மனிதர்கள் இந்த உன்னதமான பணியில் உதவியிருப்பர். அவர்களையும், இந்த மஸ்ஜித்தை இன்று இந்நிலைக்கு கொண்டு வந்த சகோதரர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். அவர்களுடைய இம்மை மறுமை வாழ்விற்காக பிரார்த்திக்கின்றோம்.
அல்குர்ஆன் - அல்சுன்னா அடிப்படையில் இயங்கவல்ல ஒரு மஸ்ஜித்தாக சின்னபள்ளிவாசலும் விளங்கும் எனும் அசையாத நம்பிக்கை எமக்கு உண்டு. அந்த நம்பிக்கை உங்களிற்கும் உண்டு என்பதும் எமது நம்பிக்கைகளாகும்.

No comments:
Post a Comment